அக்காவுடன் கணவனை பகிர்ந்துகொண்ட தங்கை… காரணம் என்ன தெரியுமா? நெகிழ்ச்சி சம்பவம்!!

அக்காவுடன் கணவனை பகிர்ந்துகொண்ட தங்கை… காரணம் என்ன தெரியுமா? நெகிழ்ச்சி சம்பவம்!!

இந்தியா-வில் இளைஞர் ஒருவரை இரண்டு பெண்கள் கல்யாணம் செய்து கொண்ட நிலை-யில், அதன் பின்னணி காரணம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநில-த்தில் இருக்கும் கோலார் மாவட்டம் முல்பாகல் தாலுகா வேகமடுவே கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரியா. இவர் வாய் பேச முடியாத மாற்றுதிறனாளி ஆவார். இவருக்கு லலிதா என்ற தங்கை உள்ளார்.

இந்நிலை-யில், சுப்ரியா மாற்றுத்திறனாளி என்பதால், அவரை யாரும் கல்யாணம் செய்து கொள்ள முன்வர-வில்லை. இது போன்ற சூழ்நிலை-யில், லலிதாவுக்கும், உமாபதி என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கல்யாணம் பேசி நிச்சயம் செய்யப்பட்டது.

இதையடுத்து இவர்களின் கல்யாணம் நேற்று நடக்க இருந்தது. அப்போது லலிதா, எனது அக்கா மாற்று திறனாளி என்பதால் யாரும் கல்யாணம் செய்து கொள்ள முன்வர-வில்லை.
இதனால் நீங்களே என்னையும், எனது அக்காவையும் கல்யாணம் செய்து கொள்ளுங்கள் என கூறியுள்ளார். ஆனால் இதற்கு உமாபதி மறுத்தார். ஆனால் எனது அக்காவையும் சேர்த்து கல்யாணம் செய்து கொண்டால் தான் உங்களை கல்யாணம் செய்வேன் என்று உமாபதியிடம், லலிதா திட்டவட்டமாக கூறியதால், லலிதா மீது கொண்ட காதலால், இதற்கு சம்மதம் தெரிவித்த உமாபதி, தனது குடும்பத்தினரிடமும் பேசி சுப்ரியா, லலிதாவை கல்யாணம் செய்ய சம்மதம் வாங்கி இருந்தார்.

அதன் பின் நேற்று ஒரே மேடை-யில் உமாபதி, சுப்ரியா மற்றும் லலிதாவுக்கு கல்யாணம் நடந்தது. இவர்களின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் அதிக அள-வில் பகிரப்பட்டு வருகிறது.

இதையும் பாருங்க:  இடுப்புக்கு கீழ் ஒட்டி பிறந்த இரட்டையர்கள்

கருத்தை சொல்லுங்கள் ...