அமிதாப் குடும்பத்தினருக்கு கொரானோ வந்தது எப்படி ?

அமிதாப் குடும்பத்தினருக்கு கொரானோ வந்தது எப்படி ?

ஹிந்தித் திரையுலகின் மூத்த நடிகரான அமிதாப் பச்சன் குடும்பத்தினரு-க்கு கொரானோ தொற்று என்ற செய்தி கடந்த இரண்டு நாட்க-ளாக மீடியாக்-களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அமிதாப்பச்சன் மனைவி ஜெயாபச்சனைத் தவிர அவரது மகன் அபிஷேக், மருமகள் ஐஸ்வர்யாராய், பேத்தி ஆராத்யா ஆகியோருக்கு கொரானோ தொற்று உறுதி செய்யப்-பட்டுள்ளது.

அமிதாப், அபிஷேக் மருத்துவ மனையில் அனுமதிக் கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஐஸ்வர்யாவும், ஆராத்யாவும் வீட்டிலிருந்தே சிகிச்சை-களை மேற்கொண்டு வருகிறார்கள்.

இதனிடையே, அபிஷேக்பச்சன், அமிதாப்பச்சன் ஆகியோர் அவர்களது திரைப்பட வேலைகளுக்காக வெளியில் சென்று வந்ததால்தான் அவர்களுக்கு தொற்று ஏற்பட்டதாக ஒரு தகவல் பரவி வருகிறது. அபிஷேக் பச்சன் அவர் நடிக்கும் வெப்சீரிஸ் ஒன்றிற்காக டப்பிங் சென்றுள்ளார். தற்போது அந்த டப்பிங் ஸ்டுடியோவை பாதுகாப்பு கருதி மூடியுள்ளார்களாம்.

அமிதாப்பும் தன்னுடன் இருந்தவர்கள் கொரானோ பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டதும் அவர் வெளியில் சென்றதால் தான் என்று சொல்கிறார்கள். கொரானோ பாதுகாப்புக்கான விதிகளைப் பின்பற்றுங்கள் என நேற்று கூட அபிஷேக் கேட்டுக் கொண்டார்.

அமிதாப் குடும்பத்தினர் சீக்கிரமே குணமடைய பல்வேறு தரப்பினரும் வாழ்த்துதெரிவித்து வருகிறார்கள்.

இதையும் பாருங்க:  தாலி கட்டும் நேரத்தில் மணப்பெண்ணுக்கு குங்குமம் வைத்த காதலன்