அமெரிக்கா மீது சைபர் தாக்குதல் சீனா நடத்துகிறது : டிரம்ப் குற்றசாட்டு

அமெரிக்கா மீது சைபர் தாக்குதல் சீனா நடத்துகிறது : டிரம்ப் குற்றசாட்டு

அமெரிக்காவில் உள்ள தனியார் நிறுவனங்கள் மீது சீனா சைபர் தாக்குதல் நடத்துவதாக அமெரிக்கா அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.

அமெரிக்க அரசின் முக்கிய துறை-களையும், பல தனியார் நிறுவனங்-களையும் குறிவைத்து பல மாதங்களாக சைபர் தாக்குதல் நடந்து வந்ததை அமெரிக்க அதிகாரி-கள் அண்மை-யில் கண்டுபிடித்தனர். இந்த சைபர் தாக்குதலின் பின்னணி-யில் ரஷியா இருப்பதாக அமெரிக்க அரசின் மூத்த அதிகாரிகளும், தனியார் நிறுவனங்களும் சந்தேகம் தெரிவித்-தன. அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோவும் அமெரிக்க அரசு மீதான சைபர் தாக்குதலுக்கு ரஷியா தான் காரணம் என கூறினார்.

ஆனால் ஜனாதிபதி டிரம்ப் இதற்கு முரணான கருத்தை தெரிவித்துள்ளார். அதாவது சைபர் தாக்குதலுக்கு ரஷியா அல்ல சீனா தான் காரணம் என அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதுபற்றி அவர் கூறுகை-யில், “சைபர் தாக்குதலின் பாதிப்பு-கள் உண்மை-யில் இருப்பதைவிட போலி ஊடகங்களில் மிகைப்படுத்தி காட்டப்பட்டுள்ளன. இது பற்றி எனக்கு முழுமை-யாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எல்லாமே கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த நாச வேலை-யில் ஈடுபட்டது சீனாவாக இருக்கலாம். ரஷியா இல்லை. சீனாவின் பங்கு பற்றி விவாதிப்பதற்கு ஊடகங்-கள் பயப்படுகின்றன” என்றார்.

அதே சமயம் சைபர் தாக்குதல் தொடர்பாக சீனா மீது முன் வைக்கும் குற்றச்சாட்டு-களுக்கு அவர் எந்த வித ஆதாரங்-களையும் வழங்க-வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related articles

error: Content is protected !!