அம்மாவாக மாறிய அண்ணனின் காணொளி

அம்மாவாக மாறிய அண்ணனின் காணொளி

அம்மாவாக மாறிய அண்ணனின் காணொளி ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் பெருத்த ஆதரவை பெற்று தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

சகோதரன், சகோதரி அன்பு வார்த்தைகளால் அளவிடவே முடியாது. திருப்பாச்சி படத்தில் இளைய தளபதி விஜய், தன் சகோதரி மேல் அதீத பாசத்தோடு இருப்பார். அதேபோல் சகோதரிகளின் மீது உயிரையே வைத்திருக்கும் சகோதரன்கள் இங்கு ஏராளம்.

சகோதரன்களுக்கு அம்மாவாக மாறிப்போகும் சகோதரிகளும், சகோதரிகளுக்கு அப்பாவாக மாறிப்போகும் சகோதரன்களும் இங்கு அதிகம். வளர்ந்த பின்பு தங்கள் சகோதரிக்கு பார்த்து, பார்த்து வரன் தேடும் இடத்தில் சகோதரன்கள் அப்பா ஸ்தானத்தில் இருந்து மிளிர்கின்றனர். சகோதரன்களின் அன்பு அந்தவகையில் அளவிட முடியாது.

இங்கேயும் அப்படித்தான். கலிபோர்னியா நாட்டில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. குழந்தைகளுக்கான பேஸ்கட் பால் மைதானத்தில் சகோதரி பேஸ்கட் பாலை நெட்டுக்குள் போட முயற்சித்தாள். அவளால் போட முடியவில்லை. இதனால் அந்த குட்டி மொட்டு அழத்தொடங்கியது. இதைப் பார்த்த சகோதரன், சகோதரன் என்றால் பெரிய வயதெல்லாம் இல்லை. அவனும் பொடியன் தான். நான்கு, ஐந்து வயது இருக்கும். தன் சகோதரியை நெருங்கி வந்து அவள் கண்ணீரைத் துடைத்து, விட்டு அன்பாக முத்தம் கொடுக்கிறான்.

மேலும் தன் சகோதரியை தன் பிஞ்சுக் கைகளால் தூக்கி அவளை பேஸ்கட் பால் நெட் அருகே கொண்டு செல்கிறான். இப்போது சகோதரி பாக்ஸ்க்குள் பந்தைப் போட இரு குழந்தைகளின் முகங்களையும் பார்க்க வேண்டுமே! அடேங்கப்பா..இந்த பாசத்துக்கு இணையே கிடையாது. நீங்களே பாருங்களேன்.

இதையும் பாருங்க:  இந்த மாப்பிளை என்னடா இவ்ளோ கோவகாரணா இருக்கான்...திருமணம் முடிஞ்சி மனைவியுடன் சாப்பிடும் முதல் பந்தியில் இப்படியா செய்வாங்க? வீடியோ கடைசீ வரை பாருங்க

Related articles