அம்மாவுடன் சேர்ந்து குழந்தை செய்த ரசிக்கவைக்கும் செயல்

அம்மாவுடன் சேர்ந்து குழந்தை செய்த ரசிக்கவைக்கும் செயல்

அம்மாவுடன் சேர்ந்து குழந்தை செய்த ரசிக்கவைக்கும் செயல் ஓன்று இணையத்தில் வீடியோவாக வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து செம வைரலாகி வருகிறது.

தன் தாயோடு சேர்ந்து குட்டிக் குழந்தை செயல் ஒன்று இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. அப்படி அந்தக் குட்டிமொட்டு என்ன செய்தார் எனத் தெரிந்துகொள்ளத் தொடர்ந்து படியுங்கள். குழந்தைகளின் உலகம் மிக, மிக அலாதியானது. வாயில் இருந்து தவற விடும் வார்த்தைகள்கூட குழந்தைகளால் அழகாகிறது. அதனால்தான் அவைகூட ரசிக்க முடிகிறது. இந்த உலகில் நாம் எத்தனை முறைப் பார்த்தாலும் சலிக்காத காட்சிகளில் ஒன்றுதான் குழந்தைகளின் நடனம். அவர்களின் நடனம் நம்மையும் அறியாமல் வெகுவாக ரசிக்க வைத்துவிடும்.

‘குழல் இனிது யாழ் இனிது என்பர் தன் மக்கள் மழலை சொல் கேளாதவர்’ என்கிறது பழமொழி. குழந்தைகள் செய்யும் எந்த ஒரு செயலுமே வெகுவாக கவனிக்க வைத்துவிடுகிறது. நம்மை மிகவும் ரசனைக்குரியதாகவும் அது மாற்றி விடுகிறது. அதனால் தான் குழந்தைகளின் வீடியோக்களும், வெள்ளந்தி குணமும் அவ்வப்போது இணையத்தில் டிரெண்டாகி விடுகிறது.

இங்கேயும் ஒரு குட்டிதேவதை செய்த செயல் இணையத்தில் தீயாகப் பரவிவருகிறது. அப்படி, அவர் என்ன செய்தார் எனத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். இந்த பிஞ்சு குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு அந்தக் குழந்தையின் அம்மா பாடல் பாடுகிறார். ‘ஒரு மின்சாரப் பார்வையின் வேகம்…வேகம்’ என அந்த தாய் பாடப்பாட, ஏதோ தனக்கும் அந்தப் பாடல் அத்துப்பிடி போல் அந்த குட்டி குழலை கூடவே சேர்ந்து எசப்பாட்டு போடுகிறது.

இதையும் பாருங்க:  கோவில் விழாவில் டிரம்ஸ் இசைக்கு இளைஞருடன் சேர்ந்து இளம்பெண் போட்ட செம டான்ஸ்

நிச்சயமாக இது கண்கொள்ளாக்காட்சி தான். இதோ நீங்களே இதைப் பாருங்களேன். மறக்காம இந்த குழந்தைக்கு சுத்திப் போட்டுருங்க என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Related articles