‘அம்மா கை மாட்டிக்கிச்சிமா’ அழகாக நடிக்கும் சுட்டி குழந்தை

‘அம்மா கை மாட்டிக்கிச்சிமா’ அழகாக நடிக்கும் சுட்டி குழந்தை

‘அம்மா கை மாட்டிக்கிச்சிமா’ அழகாக நடிக்கும் சுட்டி குழந்தையின் வீடியோ இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது செம வைரலாக பரவி வருகிறது.

சின்னக் குழந்தைகள் இருக்கும் வீட்டில் சந்தோசத்துக்கு குறைவே இருக்காது. அவர்கள் செய்யும் குறும்புகளை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் ரசித்துக் கொண்டே இருக்கலாம். அதிலும் இந்த தலைமுறை குழந்தைகள் வேற லெவலில் சுட்டித்தனம் செய்கிறார்கள். இப்போது சின்ன வயதிலேயே யுடீயூப் பார்த்தே வளர்வதால் குழந்தைகள் அதில் கார்ட்டூன்கள் பார்த்து அதேபோல் ரசனையாக ஏதாவது செய்ய முயற்சிப்பதையும் பார்த்திருக்கிறோம். இங்கேயும் அப்படித்தான்.

ஒரு குட்டிக் குழந்தை தன் அம்மாவுடன் செம செல்லமாக ஒரு விளையாட்டு விளையாடுகிறது. அதைப் பார்த்த நெட்டிசன்கள் அடடே என்ன ஒரு உலக மகா நடிப்புடா சாமி என கமெண்ட் செய்துவருகின்றனர், அந்தக் குழந்தை அப்படி என்ன செய்தது தெரியுமா? வீட்டில் தண்ணீர் கேன் ஒன்று இருந்தது. அதன் துவாரத்துக்குள் தானாகவே கையை விட்டுவிட்டு எடுக்க முடியாதது போல் அழுகிறது.

உடனே குழந்தையின் அம்மா கையை எடுத்துவிட்டதும் மறுபடியும் குழந்தையே கையை விட்டுவிட்டு மீண்டும் அழுவது போல் நடிக்கிறது. பிறகு மீண்டும் கையை எடுத்துவிட இதையே குழந்தை விளையாட்டாக செய்கிறது. ஆனால் ஒரு வயது குழந்தையின் இந்த நடிப்பை வேற லெவல் என்றே சொல்லிவிடலாம். இதோ நீங்களே பாருங்களேன்.

இதையும் பாருங்க:  தம்பியை முதல் முறையாக கையில் தூக்கிய அக்காவின் ரியாக்சன் பாருங்க!! இரண்டு கண்கள் பத்தாது!

Related articles