அம்மா மடியில் படுக்க நடந்த பாசப்போராட்டம்

அம்மா மடியில் படுக்க நடந்த  பாசப்போராட்டம்

அம்மா மடியில் படுக்க மகளுக்கும் நாய்க்கும் இடையில் நடந்த பாசப்போராட்டம் ஓன்று வீடியோவாக இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை பெற்று தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

முதல்ல நான்தான் வந்தேன்…அதுனால நான்தான் படுப்பேன் என்று வளர்ப்பு நாயுடன் சண்டை போடும் பெண்….’ வீட்டில் அதிகம் பேரால் வளர்க்கப்படும் செல்லப்பிராணி நாய் தான். வளர்ப்பவர்கள் அதனை வீட்டில் உள்ளவர்களை போன்று பார்த்துக்கொள்கிறார்கள்.

அதனால் அதுவும் வீட்டில் உள்ளவர்களுடன் பாசத்தை வைத்து விடுகிறது. அந்த வகையில், இந்த வீடியோவில் உள்ள ஒரு பெண் தன்னுடைய அம்மாவுடைய மடியில் படுத்துக் கொண்டிருக்கிறார். அப்போது, அவர்களால் வளர்க்கப்படும் அவர்களின் செல்லப்பிராணி நாயானது நான்தான் அம்மா மடியில் படுப்பேன் என்று அடம் பிடிக்கும் விதமாக அந்த பெண்ணின் கை மற்றும் தலையை தள்ளி தள்ளி விடுகிறது.

அப்போது அந்த பெண் நான்தான் முதலில் வந்தேன் அதனால் நான்தான் படுப்பேன் நீ போடா என்று சொல்லுகிறார். இதனை கேட்காத நாயானது மீண்டும் தள்ளி விட்டுக் கொண்டே இருக்கிறது. இதனை பொறுக்க முடியாத அந்த பெண் எழுந்தே போய் விட்டார். அதன் பிறகு அந்த நாயானது மிகவும் ஆசையாக அம்மாவின் மடியில் தலை வைத்து படுத்துக்கொள்கிறது. இந்த சண்டை போடும் வீடியோவானது மிகவும் அதிகமாக ஷேர் பெற்று வைரலாகி லைக்குகளை பெற்று வருகிறது.

இதையும் பாருங்க:  கோயில்விழாவில் செம ஆட்டம் போட்ட இளம்பெண்கள்.. என்னாமா ஆடுறாங்க… பார்க்க இரண்டு கண்கள் போதாது..!

கருத்தை சொல்லுங்கள் ...