அரசுப் பள்ளிக்கு சென்று பாடம் நடத்திய மாவட்ட ஆட்சியர்!

அரசுப் பள்ளிக்கு சென்று பாடம் நடத்திய மாவட்ட ஆட்சியர்!

கூகிள் செய்தியிலும் எங்கள் செய்தியை படிக்கலாம் Follow Now

தஞ்சை அருகே அரசுப் பள்ளியில் ஆய்வுக்கு சென்ற மாவட்ட ஆட்சியர் மாணவர்களுக்கு பாடம் நடத்தினார்.

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது பத்தாம் வகுப்பிற்கு சென்ற மாவட்ட ஆட்சியர் மாணவர்களுக்கு கணித பாடம் குறித்து விளக்கம் அளித்தார். தொடர்ந்து அங்கிருந்த கரும்பலகையில் எழுதி கணிதப் பாடம் நடத்திய மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை மாணவர்களுக்கு கணிதப் பாடத்தைக் கற்றுக் கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கிக் கூறினார்.

மாவட்ட ஆட்சியர் அரசுப் பள்ளியில் நுழைந்து மாணவர்களுக்கு பாடம் நடத்திய சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது இதற்கு முன்பாக சேலம் முன்னாள் கலெக்டர் ரோகிணி பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்தி அனைத்து தரப்பு மக்களாலும் பாரட்டு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற சிறப்பான , தரமான செய்திகளை டெலிக்ராம் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள் Join Now

கூகிள் செய்தியிலும் எங்கள் செய்தியை படிக்கலாம் Follow Now

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...

error: Content is protected !!