அஸ்ஸாமில் வெள்ளத்தால் பேரழிவு: 4 ஆயிரம் கிராமங்கள் நீரில் மூழ்கியது.. 45 லட்சம் பேர் பாதிப்பு

அஸ்ஸாமில் வெள்ளத்தால் பேரழிவு: 4 ஆயிரம் கிராமங்கள் நீரில் மூழ்கியது.. 45 லட்சம் பேர் பாதிப்பு

குவகாத்தி:

அஸ்ஸாமில் வெள்ளத்தால் பேரழிவு ஏற்பட்டுள்ளது. அங்கு 30 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி கிடக்கின்றன. புகழ் பெற்ற காஸிரங்கா தேசிய பூங்கா 90 சதவீதம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

அஸ்ஸாம் மாநிலத்தில் பிரம்மாபுத்திரா உள்ளிட்ட 10 ஆறுகளில் கனமழையால் வரலாறு காணாத வெள்ளம் பாய்ந்தோடுகிறது. இதன் காரணமாக அஸ்ஸாமின் 33 மாவட்டங்களில் 30 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இதைடுத்து அஸ்ஸாமிற்கு வெள்ளத்தில் இருந்து மீண்டு வர மத்திய அரசு தேவையான உதவியை செய்யும் என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். இது தொடர்பாக அஸ்ஸாம் முதல்வர் சர்பானந்தா சோனாவாலிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசி உறுதி அளித்தார்.

Now Assam Floods danger level: 15 Dead, 43 Lakh People Affected

அஸ்ஸாமில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இதுவரை 42லட்சத்து 87 ஆயிரம் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 ஆயிரத்து 157 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி கிடக்கின்றன. 30 மாவட்டங்களில் ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 211 ஹெக்டேர் விளைநிலங்கள் வெள்ளத்தால் நாசமாகி உள்ளன என்று அஸ்ஸாம் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

ஏராமான சாலைகள், பாலங்கள்,கட்டிடங்கள், வீடுகள் என பல வெள்ளத்தால் சேதமடைந்துள்ளன. குறிப்பாக சோனிட்பூர், கோலாகாட், ஜோர்காட், பக்ஸா, திம்ருகார்க், நல்பாரி, ஹோஜாய், மோரிஹான், லகிம்பூர், தராங், நகோன், கம்ருப், பர்பேட்டா என பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

Now Assam Floods danger level: 15 Dead, 43 Lakh People Affected

வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை படகுகள் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் தேசிய பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் மீட்டு வருகிறார்கள். அஸ்ஸாமின் புகழ்பெற்ற கஸிரங்கா தேசிய பூங்காவின் 90 சதவீதம் நீரில் மூழ்கி கிடக்கிறது. இதனால் வனவிலங்குகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த தகவலை அஸ்ஸாம் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அஸ்ஸாமி வெள்ளத்தில் சிக்கி இதுவரை 15 பேர் பலியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!