ஆகஸ்ட் 8ம் தேதி வெளியாகுது நேர்கொண்ட பார்வை!

ஆகஸ்ட் 8ம் தேதி வெளியாகுது நேர்கொண்ட பார்வை!

ஆகஸ்ட் 8ம் தேதி வெளியாகுது நேர்கொண்ட பார்வை!

சென்னை: நேர்கொண்ட பார்வை திரைப்படம் ஆகஸ்ட் 8ம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விஸ்வாசம் படத்தைத் தொடர்ந்து, அஜித் நடித்துள்ள படம் நேர்கொண்ட பார்வை. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரும், பிரபல தயாரிப்பாளருமான போனிகபூர் தயாரித்துள்ள இப்படத்தினை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார்.

Nerkonda parvai is releasing on August 8th

இந்த படத்தில் அஜித்தோடு வித்யா பாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ், ரங்கராஜ் பாண்டே ஆகியோர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நேர்கொண்ட பார்வை திரைப்படம் அடுத்தமாதம் 8ம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தயாரிப்பாளர் போனி கபூர் தனது டிவிட்டர் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளார். ஏற்கனவே காலையில் நேர்கொண்ட பார்வை படத்தின் போஸ்டர் ஒன்றை போனி கபூர் திடீரென வெளியிட்டார். இதனை அஜித் ரசிகர்கள் டிவிட்டரில் டிரெண்டிங் ஆக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் பாருங்க:  ராட்சசன் பட குழந்தையா இது !! அம்மாடியோவ் !! வைர லாகும் புகைப்படம்

Related articles