ஆட்டுக்குட்டிக்கு தாயாக மாறி பாலூட்டிய நாய்.. காண்போரை நெகிழ வைக்கும் சம்பவம்…!

ஆட்டுக்குட்டிக்கு தாயாக மாறி பாலூட்டிய நாய்.. காண்போரை நெகிழ வைக்கும் சம்பவம்…!

தன் தாயை இழந்த ஆட்டுக்குட்டிக்கு, நாய் ஒன்று பாலூட்டி சீராட்டி வளர்த்து வரும் நிகழ்வு காண்போரை நெகிழச் செய்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் குமரமலை கிராமத்தைச் சேர்ந்தவர் துரைச்சாமி. இவர் வளர்க்கும் நாய் தான் ஆட்டுக்குட்டி ஒன்றுக்கு பால் ஊட்டி வருகிறது.

இந்த குட்டியை ஈன்ற அம்மா ஆடு நான்கே நாட்களில் உ யி ரி ழ ந்துள்ளது. உண்ண உணவு இல்லாமல் த வி த்து வந்த அம்மா ஆடு, அ ரிசியை தி ன்றதால், வயிறு ஊதி இ ற ந் து போனது.

அம்மா ஆடு இல்லாமல் தவித்த ஆட்டுக்குட்டிக்கு துரைச்சாமி வளர்க்கும் நாயே தாயாக மாறி, ஆட்டுக்குட்டிக்கு தினமும் பாலூட்டி வளர்த்து வருகிறது.

இச்சம்பவத்தை பார்த்த எழுத்தாளர் சோளச்சி என்பவர் காணொளி எடுத்து அதை தனது வளைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து நாய் உரிமையாளரிடம் கேட்டபோது,

“குட்டியை ஈன்ற நான்கே நாட்களில் அம்மா ஆட்டுக்குட்டி இ ற ந்து விட்டது. அதன் பிறகு நான் வளர்க்கும் நாயிடம், ஆட்டுக்குட்டி தானாக சென்று பால் குடித்தது.

முதலில் நாங்_கள் பயந்தோம். ஆட்டுக்குட்டியை கடித்துவிடுமோ அல்லது நாயின் பால் ஆட்டுக்குட்டிக்கு ஏற்றுக்கொள்ளுமா என்றெல்லாம் யோசித்தோம். ஆனால் நாய் அந்த ஆட்டுக்குட்டியை தனது பிள்ளைபோல் அரவணைத்து அன்பு காட்டி, பாலூட்டி வருகிறது. இது எங்களுக்கே ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது” என்றார்.

இதுகுறித்து எழுத்தாளர் சோளச்சி கூறுகையில், “தாயின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது ஆனால் ஆட்டுக்குட்டிக்கு இந்த நாய் பாலூட்டி மனிதநேயத்தையும், அம்மாமையையும் உணர்த்தியிருக்கிறது. மாறிவரும் காலகட்டத்தில் மக்களும் மனிதநேயம் குன்றாமல் நடந்துகொள்ள வேண்டும்” என்றார்.

இதையும் பாருங்க:  இனி செவ்வாழை வாங்கும்போது உஷாராக இருங்கள்....

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...