ஆபத்தான மலை பாதையில் பேருந்தை அற்புதமாக இயக்கிய ஓட்டுநர்

ஆபத்தான மலை பாதையில் பேருந்தை அற்புதமாக இயக்கிய ஓட்டுநர்

எப்பா டேய் இந்த பஸ் ஓட்டும் ஓட்டுனருக்கு ஒரு அவார்ட் கொடுங்கப்பா என்று சொல்லும் அளவிற்கு ஒரு ஓட்டுநர் வாகனம் ஓட்டிய வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது செம வைரலாகி வருகிறது.

சாதாரண சாலைகளில் கனரக வாகனங்களை ஓட்டுவதே பெரிய விஷயம். ஏனென்றால் வாகனங்கள் பெரிதாக இருக்கும் போது அதன் இருபுறங்களிலும் வரும் வாகனங்களை கவனித்து வாகனங்களை இயக்க வேண்டும் மேலும் ரோட்டில் இருக்கும் பல்லை மேடுகளை கவனித்து வாகனங்களை இயக்க வேண்டும். அப்படி இருக்கும்போது மலைகளில் வாகனங்களை இயக்குவது அவ்வளவு சுலபமல்ல. மழை என்றால் ஊட்டி கொடைக்கானல் போன்ற மலைகளை சொல்லவில்லை. ஏனென்றால் அங்கு தரமான சாலைகள் அமைக்கப்பட்டு இருக்கும். சில பகுதிகளில் சாலைகள் தரமானதாக இருக்காது. அப்படி ஒரு மலைப்பகுதியில் பேருந்தை இயக்கிய ஓட்டுனரின் வீடியோ தான் தற்போது இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை பெற்று வைரலாகி வருகிறது.

குறிப்பிட்ட அந்த வீடியோவில் சரியான சாலைகள் இல்லாத மலைப்பகுதியில் அந்த ஓட்டுநர் பேருந்தை இயக்கி வருகிறார் அப்போது சிறிய பாதையில் செல்லும்போது அந்த பேருந்து மலையிலிருந்து கீழே விழுவது போல் தெரிகிறது சுதாரித்துக் கொண்ட அந்த ஓட்டுநர் சிறப்பாக பேருந்தை இயக்கி பேருந்தில் இருந்த பயணிகளின் உயிரைக் காப்பாற்றியுள்ளார் என்று சொல்லலாம். அந்த வீடியோ தான் தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வைரலாகி வருகிறது குறிப்பிட்ட அந்த வீடியோ உங்களுக்காக இங்கே இணைக்கப்பட்டுள்ளது

இதையும் பாருங்க:  குழந்தை அழுததால் யானை செய்த வியக்கவைக்கும் செயல்

கருத்தை சொல்லுங்கள் ...