ஆர்.கே.நகர் படம் என்னை உத்வேகப்படுத்தியது -நடிகர் இனிகோ பிரபாகர்

ஆர்.கே.நகர் படம் என்னை உத்வேகப்படுத்தியது -நடிகர் இனிகோ பிரபாகர்

கூகிள் செய்தியிலும் எங்கள் செய்தியை படிக்கலாம் Follow Now

ஆர்.கே.நகர் படம் என்னை உத்வேகப்படுத்தியது -நடிகர் இனிகோ பிரபாகர்

 

ஆரம்ப காலத்தில் சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து பின் தனது தனித்துவமான நடிப்பு திறமையால் பல படங்களில் முக்கிய மற்றும் முதல்மை கதாபாத்திரங்களில் நடித்து பலரது பாராட்டை பெற்றவர்தான் நடிகர் இனிகோ பிரபாகர்.

 சென்னை 28, சென்னை 28 II, பூ, சுந்தரபாண்டியன், ஆர்.கே நகர் என இவர் நடித்த அனைத்து படங்களிலும் இவரது நடிப்பும், கதாபாத்திரத்தின் தன்மையை கையாண்ட விதமும் பலரையும் கவர்ந்திருக்கும். அழகர் சாமியின் குதிரை, ரம்மி, பிச்சுவாகத்தி, வீரய்யன் ஆகிய படங்களில் நாயகனாகவும் நடித்திருந்தார்.
 நடிகர் இனிகோ பிரபாகர் கூறுகையில், “நான் என்றும் என் கதாபாத்திரத்தின் தன்மை மாறாமல் நடிப்பது ரசிகர்களுக்கு பிடித்திருக்கிறது. அதிலும் ஆர்.கே நகர் படத்தில் வில்லனாக நடித்திருந்தாலும் அந்த படத்தில் கதாநாயகனுக்கு நிகரான கதாபாத்திரம் என்பதால் அது எனது நடிப்பு எதார்த்தமாக இருக்க வேண்டும் என்று இயக்குனர் சரவண ராஜன் விரும்பினார், நானும் அதையே செய்துள்ளேன். இயக்குனர் வெங்கட்பிரபு ஆர்.கே நகர் படத்தில் என் நடிப்பை பலரும் பாராட்டியதாக கூறியது என்னை அதிக உத்வேகப்படுத்தியது.
தற்போது  புதிய இரண்டு படங்களில் கதாநாயகனாக நடிக்கின்றேன். இந்த இரண்டு படங்களின் விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்றார்.
இதுபோன்ற சிறப்பான , தரமான செய்திகளை டெலிக்ராம் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள் Join Now

கூகிள் செய்தியிலும் எங்கள் செய்தியை படிக்கலாம் Follow Now

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...

error: Content is protected !!