ஆஸ்திரேலியா தொடரில் இருந்து ஜடேஜா விலகல் – இந்திய அணிக்கு பின்னடைவு

ஆஸ்திரேலியா தொடரில் இருந்து ஜடேஜா விலகல் – இந்திய அணிக்கு பின்னடைவு

Follow us on Google News Click Here

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று கான்பெர்ராவில் நடந்து முடிந்தது. இதில் இந்திய அணி அட்டகாசமான வெற்றி பெற்று தொடரில் முன்னிலையில் உள்ளது . நேற்றைய போட்டியில் பேட்டிங் செய்யும்போது இந்திய அணியின் வீரர் ஜடேஜா காயம் அடைந்தார். முதலில் ஹாம்ஸ்டிரிங் காயம் அடைந்தார். அதன்பின் மிட்செல் ஸ்டார்க் வீசிய பவுன்சர் பந்து அவரின் ஹெல்மெட்டை தாக்கி கன்கசன் ஆனார்.

இந்நிலையில் காயம் காரணமாக ஆஸ்திரேலியா-வுக்கு எதிரான டி-20 தொடர் தொடரில் இருந்து இந்திய அணி வீரர் ஜடேஜா முழுவதுமாக விலகியுள்ளார்.மீதமுள்ள இரண்டு டி20 போட்டியில் ஜடேஜா விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக ஷர்துல் தாகூர் அணியில் இணைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் டி20 யில் வெறிக்கு பக்கபலமாக அடித்தளமிட்டது ரவீந்தர் ஜடேஜா என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us on Google News Click Here

கருத்தை சொல்லுங்கள் ...