இணையத்தில் கசிந்தது விஜய்யின் பிகில் பட பாடல்! தளபதி ரசிகர்கள் ஷாக்

விஜய்யின் 63வது படமாக உருவாகியுள்ளது பிகில். அட்லீ இயக்கியுள்ள இப்படத்தை கத்தி படத்திற்கு பின்னர் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானதை தொடர்ந்து இப்பட டீசருக்காக காத்திருந்த விஜய் ரசிகர்களுக்கு இன்ப செய்தியாக இப்பட பர்ஸ்ட் சிங்கிள் ட்ராகாக வெறித்தனம் என்ற பாடலை விஜய் பாடவுள்ளார் என்ற தகவல் கிடைத்தது.
இந்நிலையில் பிகில் படத்தில் இருந்து பாடல் ஒன்று இணையத்தில் கசிந்தவிட்டதாக சில மணிநேரங்களுக்கு முன்பு இருந்தே வதந்தி ஒன்று பரவி வந்த நிலையில் 1 நிமிடம் 7 வினாடிகள் ஓடக்கூடிய சிங்கப்பெண்ணே என தொடங்கிய பாடல் ஒன்று பிகில் பட பாடல் என்ற பெயரில் வெளியாகியுள்ளது.