இதுதான் உண்மையில் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட திருமணம்

இதுதான் உண்மையில் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட திருமணம்

கல்யாணங்கள் சொர்க்கத்தில் நிச்சியக்கப்படுகிறது என்று கூறுவார்கள்.எத்தனை கல்யாணங்கள் அவ்வாறு சொர்க்கத்தில் நிச்சயக்கப்படுகிறது என்பது தெரியவில்லை.ஆனால் நாம் தினசரி பல பிரச்சனைகளை கல்யாண வாழ்க்கையில் சந்தித்துக்கொண்டுதான் இருக்கிரோம். வேட்டையாடு விளையாடு படத்தில் நாயகியை பார்த்த உடனே காதலைச் சொல்லும் கமலஹாசன், எனக்கு இதுவே லேட் எனச் சொல்லுவார்.

தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் கறம்பகுடி பகுதியில் முத்துகருப்பையா கல்யாண மண்டபத்தில் ஒரு கல்யாண நிகழ்ச்சி நடந்தது. அந்த கல்யாணத்துக்கு வாய்பேச முடியாத மாற்றுத்திறனாலி ராமராஜன்(30), என்பவரும் நாகப்பட்டிணத்தை சேர்ந்த வாய்பேச முடியாத தேவி(27) என்ற பெண்ணும் கலந்து கொண்டனர்.

இருவருக்கும் பெற்றோர் தனித்தனியே வரன் பார்த்து வந்தனர். அதேபோல் ஒரு சம்பவம் நிஜத்தில் நிகழ்ந்துள்ளது. அதுவும் காதல் ஜோடிகள் இருவரும் வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் என்பதுதான் அதில் ஆச்சர்யமானது.

இந்த நிலையில் கல்யாண மண்டபத்தில் எதேச்சையாக ராமராஜனும், தேவியும் சந்தித்தனர். அவர்கள் இருவரும் சைகை பாஷையிலேயே பேசினார்கள். அடுத்த சில நிமிடங்களிலேயே இருவரும் கல்யாணம் செய்ய முடிவு செய்தனர்.

இதை வீட்டில் உள்ள பெரியவர்களிடமும் சொல்ல, அவர்கள் சேர்ந்து கறம்பகுடி முருகன் கோவிலில் நடராஜர் சன்னதி முன்பு கல்யாணம் செய்து வைத்தனர்.வாய் பேச முடியாத இருவரும், மனதால் பேசி கல்யாணம் செய்த சம்பவத்தை பகுதிவாசிகள் நெகிழ்ச்சியோடு பேசி வருகின்றனர்.

Related articles

error: Content is protected !!