தந்தை மீது மகள் கொண்ட பாசம்

தந்தை மீது மகள் கொண்ட பாசம்

கோபம், சிரிப்பு, வருத்தம் என எந்த ரியாக்‌ஷனைக் காட்டினாலும் அழகாகத் தெரிவது பிள்ளைகள் மட்டும் தான் அதனால்தான் பிள்ளைகள் என்றாலே நமக்கு ரசனைக்குரியவர்களாக இருக்கின்றார்கள். ஒரு கூடை நிறையப் பூக்கள் பூத்தாலும் ஒரு பிள்ளையின் புன்னகைக்கு ஈடு ஆகாது என்று சொல்வதும் அதனால் தான்!

இங்கேயும் அப்படித்தான். 6 மாதங்களே ஆன குட்டி தேவதை ஒன்று தன் தந்தை படுத்திருக்கும்போது அவரது அருகில் சென்று படுத்துக் கொள்கிறது. உடனே தந்தை எழுந்து வேறு ஒரு பக்கமாய் படுத்துக்கொள்ள தொடர்ந்து அந்தக் பிள்ளையும் அப்படியேஎழுந்து படுத்துக் கொள்கிறது.

தொடர்ந்து தந்தை மீண்டும் இடம்மாற, மறுபடியும் பிள்ளை வேறு இடத்திலும் தந்தையின் பக்கத்தில் போய் படுத்துக்கொள்கிறது. ஒருகட்டத்தில் தந்தை எழுந்து உட்கார பிள்ளையும் எழுந்து அமர்கிறது. குறித்த வீடியோவில் குட்டி தேவதை செயல் நம்மை சொக்கிப்போக வைக்கிறது. இது மகள்களைப் பெற்ற தந்தைக்கு மட்டுமே கிடைக்கும் சொர்க்கம் என இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related articles

error: Content is protected !!