இந்த காளை மாடுக்கு வளர்தவர் மேல எவ்வளவு விஸ்வாசம்ன்னு பாருங்க..!

இந்த காளை மாடுக்கு வளர்தவர் மேல எவ்வளவு விஸ்வாசம்ன்னு பாருங்க..!

Follow us on Google News Click Here

இந்த காளை மாடுக்கு வளர்தவர் மேல எவ்வளவு விஸ்வாசம்ன்னு பாருங்க என்ற தலைப்பில் ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

பாசம் மனிதர்களுக்கு மட்டுமானது என நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் பாச த்தில் மனிதர்களுக்கும், ஐந்தறிவு விலங்குகளுக்கும் பெரிய பாகுபாடு எதுவும் கிடையாது.

ஐந்தறிவு படைத்த விலங்குகளும் தங்கள் குட்டிகளின் மீதும், தன்னை வளர்ப்பவர்கள் மீதும் அலாதி பாசம் கொண்டவைதான். அதை மெய்ப்பிக்கும்வகையில் இப்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது.

பொதுவாகவே வீட்டில் பசு மாடு இருப்பது அதிர்ஷ்டம் என சொல்வார்கள். அதனால் தான் பசுவை கோமாதா எனச் சொல்கிறோம். பசு மாடு மிகவும் பாச மாக பழகக் கூடியதுகூட.

மனிதர்களோடு நெருக்க மாக இருக்கும் பிராணிகளில் முதன்மையானது மாடு. டீ, காபி என எதைக் குடித்தாலும் அதற்கு மூலப்பொருளான பாலைக் கொடுப்பதால் பசு நமக்கு அன்னமிடும் விலங்கும் கூட. சரி இங்கே விசயத்துக்கு வருவோம்.

விவசாயி ஒருவர் தன் எருமை மாடுகளைக் கொண்டு வயலை உழுதுகொண்டு இருந்தார். அப்போது, அவரது நண்பர் ஒருவர் அங்கு வந்தார். விவசாயி, தன் எருமை மாடுகளை பூட்டி அதை வயலில் உழவவிட்டு அதன் மேல் ஏறி நின்றார்.

அதைப் பார்த்ததும், அந்த விவசாயியின் நண்பர் அதேபோல் ஏறி நின்றார். ஆனால் தான் தூக்கிச் சுமப்பது தன் எஜமானார் இல்லை என்பதை தெரிந்துகொண்ட அந்த காளைகள் நகர மறுக்கிறது. மீண்டும், எஜமானார் ஏறிநின்றதும் காளை மாடுகள் மீண்டும் உழத் தொடங்குகின்றன.

இந்த மாடுகள் வயலில் முன்னால் பார்த்துத்தான் நிற்கின்றன. ஆனாலும் தன் எஜமானர் யார் என்பதை அவை அறிந்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்கள்.

Follow us on Google News Click Here

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...