இந்த தலைமுறையினர் தவறவிட்ட சொர்க்கம் இது

இந்த தலைமுறையினர் தவறவிட்ட சொர்க்கம் இது

Follow us on Google News Click Here

முந்தைய தலைமுறையில் எல்லாம் தாய்மார்கள் சிறுவர்களோடு அதிக நேரத்தை செலவு செய்தனர். ஆனால் இப்போது தாய்களும் அதிகமானோர் பணிக்குச் செல்வதால் பெற்றவர்கள் சிறுவர்களோடு சேர்ந்து விளையாடுவதே குறைந்துவிட்டது.

அதுமட்டும் இல்லாமல் முன்பெல்லாம் சுற்றத்தார் உடன் சேர்ந்து விளையாடிய சிறுவர்கள் இப்போது வீட்டுக்குள் லேப் டாப், செல்போனுக்குள் மூழ்கிக் கிடக்கின்றனர். இதனால் அவர்களின் கண்பார்வையும் சீக்கிரம் கெட்டுப் போய்விடுகிறது. முன்பெல்லாம் சிறுவர்களும், பெற்றோருமாக சேர்ந்து கண்ணாம்பூச்சி, பல்லாங்குழி என நிறைய பாரம்பர்ய விளையாட்டுக்களை விளையாடினார்கள். இன்று அதெல்லாம் இல்லை. இதோ இங்கே பாருங்கள். இந்த தலைமுறையில் நாமெல்லாம் தவறவிட்ட சொர்க்கம் என்றே இதைச் சொல்லலாம்.

இங்கே சிறுவர்களோடு சேர்ந்து அவர்களது பெற்றோரும் நம் பாரம்பர்ய விளையாட்டை விளையாடுகின்றனர். இந்த கேமில் கல்கள் ஒன்றன் மீது ஒன்று அடுக்கப்பட்டு இருக்கும். இதை இரு குழுவாகவே விளையாட முடியும். அடுக்கப்பட்ட கல்களை ஒரு டீம் பந்தால் அடிக்க, மற்றவர்கள் கல்லை அடுக்க வேண்டும். அப்படி அடுக்க வருபவர்களி பந்தை வைத்து அடிப்பார்கள். நம் பாரம்பர்ய கிராமிய விளையாட்டான இதை சிறுவர்களோடு சேர்ந்து, அவர்களது அம்மாக்களும் விளையாடி இருக்கிறார்கள். இதோ அந்த வீஃப்டியோவைப் பாருங்கள். அதுவும் அம்மாமார்களின் ஓட்டம் இருக்கிறதே…அது வேற லெவல்!

Follow us on Google News Click Here

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...