இனி செவ்வாழை வாங்கும்போது உஷாராக இருங்கள்….

இனி செவ்வாழை வாங்கும்போது உஷாராக இருங்கள்….

உணவுப் பொருட்களில் கலப்படம் என்பது ஒரு பெரிய குற்றம் பார்க்கப்படும் நிலையில். அதிலும் முக்கியமாக சிறியவர் முதல், பெரியவர்கள் வரை பயன்படுத்தம் பால், பழம் போன்ற பொருட்களில் செய்யக்கூடிய கலப்படம் என்பது மன்னிக்க முடியாத குற்றம்தான். அப்படியாக ஒரு கலப்படம் தொடர்பான வீடியோ இப்போது வைரலாக சுற்றி வந்துகொண்டிருக்கிறது. உணவுப் பொருட்களில் எத்தனையோ வகையான கலப்படங்களை நாம் இதற்கு முன்பாக பார்த்திருக்கின்றோம். ஆனால் இது மிக மிக நூதனமாக உள்ளது, இப்படியும் கூட நடக்க முடியுமா என்று அதிர்ச்சியாகவும் உள்ளது. என்ன கலப்படம் என்கிறீர்களா? சாதாரண நாட்டு வாழைப்பழத்தை கலர் பூசி, செவ்வாழை பழம் என்று விற்பனை செய்து வருகிறது ஒரு கும்பல்.

சோப்பு தண்ணீர்

இது தொடர்பாக ஒரு வைரல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் செவ்வாழைப் பழம் போன்று இருக்கக்கூடிய ஒரு வாழைப்பழத்தை ஒருவர் எடுத்து சோப்பு போட்டு அதன் தோலை தண்ணீரால் கழுவி விட, அதிர்ச்சியளிக்கும் வகையில் தோலில் உள்ள சிவப்பு வண்ணம் கலைந்து மஞ்சள் நிறமாக மாற ஆரம்பித்தது. இப்படித்தான்  முறைக்கேடு நடக்கிறது செவ்வாழை மோசடி என்று முடிகிறது அந்த வீடியோவில்.

ஏன் செவ்வாழை

செவ்வாழை மற்ற வாழைப்பழங்களை விடவும் உடலுக்கு ஆரோக்கியமானவை என்பது மட்டுமின்றி, அரிதாகக் கிடைக்கக் கூடியவை என்பதாலும், அதற்கு விலை சற்று அதிகமாக இருக்கும். இந்த அதிக காசுக்கு ஆசைப்பட்டு இவ்வாறு மோசடி நடப்பதாக வீடியோ வெளியிட்டுள்ளார் .

நாட்டு முட்டை
சாதாரண முட்டையையும் நாட்டுக்கோழி முட்டை என்று கூறி விற்பனை செய்ய கலர் பூசுவதை போன்ற ஒரு டெக்னிக் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். இந்த வைரல் வீடியோவில் மற்றொரு ஐயப்பாடும் எழுகிறது.

இதையும் பாருங்க:  செண்டை மேளத்துக்கு சேலையில் கேரள பெண் கலைஞர்கள் போட்ட செம டான்ஸ்
சந்தேகம்
பழத்தோலின் ஒரு பகுதியில் ஆங்காங்கே பழம் காய்ந்தால் ஏற்படக்கூடிய கருப்பு நிறமாக இருக்கும். எனவே மொத்தமாக கலர் ஊற்றி வண்ணம் மாற்றியிருக்க முடியாது என தெரிகிறது. ஒவ்வொரு பழமாக எடுத்து கலர் அடித்தால்தான் இவ்வளவு நுட்ப்பம் சாத்தியம்.

ஆகவே வீடியோ வைரலாக வேண்டும் என்று நோக்கத்திற்காகவும் இவ்வாறு செய்திருக்கலாம் என்ற கருத்தும் வருகிறது. எது எப்படி இருந்தாலும் உண்மையில் இது போல செவ்வாழைக்கு வண்ணம் பூசி ஏமாற்றும் கும்பல் இருந்தால், அரசு தயவு தாட்சண்யமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் கோரிக்கையாக இருக்க வேண்டும்.