இப்போதைய தலைமுறை தவறவிட்ட சொர்க்கம்… இந்த காலத்திலும் இப்படி ஒரு குடும்பமா? இவங்க சாப்பிடுற அழகே தனிதான்..நீங்களே பாருங்க..!

இப்போதைய தலைமுறை தவறவிட்ட சொர்க்கம்… இந்த காலத்திலும் இப்படி ஒரு குடும்பமா? இவங்க சாப்பிடுற அழகே தனிதான்..நீங்களே பாருங்க..!

Follow us on Google News Click Here

சின்னஞ்சிறு வயதில் பிள்ளைகளுக்கான உச்சகட்ட பொழுதுபோக்கு, நண்பர்கள் யார் எனக் கேட்டால் தாத்தா, பாட்டி என சொல்லிவிடலாம். பாட்டி மடியில் இருந்து கதை கேட்காத பிள்ளைகளே இருக்காது.

பாட்டியின் கைபிடித்து மிட்டாய் வாங்கி வந்த பிள்ளைகள் தான் நாம். தாத்தாக்களின் சைக்கிளிலோ, ஸ்கூட்டரிலோ முன்னாள் நின்று கொண்டு சென்ற பொடிசுகள் இங்கு அதிகம்.

தாத்தா, பாட்டிகளும் வீட்டில் இருக்கும் பேரக்பிள்ளைகளின் மீது உயிரையே வைத்து உள்ளனர். ஆனால் இதெல்லாம் நம் தலைமுறையும், இந்த தலைமுறையும் அனுபவித்தது. அடுத்த தலைமுறைக்கு கிடைக்குமா என கேள்வி எழுந்துள்ளது. காரணம், இன்று கூட்டு குடும்ப உறவுமுறையையே சிதைத்துவிட்டோம்.

கணவன், மனைவி தாண்டி தாத்தா, பாட்டிகளை பலரும் முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டு ரிலாக்ஸ்டாக இருக்கிறார்கள். இன்னொருபுறத்தில் இன்று கம்யூட்டர் உலகு ஆகிவிட்டது. பிள்ளைகள் செல்போனிலும், மடிகணினியிலும் உலகைப் பார்க்கின்றன. இதனாலும் தாத்தா, பாட்டியின் மடியில் கிடந்து விளையாடும் வாய்ப்பை தவறவிடுகின்றனர்.

ஆனால் இன்றும் கூட்டு குடும்ப உறவை கச்சிதமாகப் பேணும் குடும்பங்களும் உண்டு. இதோ இந்த வீடும் அப்படித்தான். யார் எங்கே என்ன வேலையாக சென்றாலும் ஞாயிற்றுக்கிழமை என வந்துவிட்டால் குடும்பமாக சேர்ந்து இருந்து சாப்பிட்டு விடுவார்கள்.

பாட்டி அன்பாக வீட்டில் இருப்போருக்கு பரிமாறிக்கொடுக்க தாத்தா, மகன், மருமகள், பேரன், பேத்தி என அனைவரும் சேர்ந்து அழகாக அமர்ந்து சாப்பிடுகின்றனர். இதைப் பார்த்தாலே நமக்கு இந்த காலத்தில் இப்படியொரு குடும்பமா? என ஆச்சர்யத்தில் மூழ்கச் செய்கிறது. இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்கள்.

Follow us on Google News Click Here

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...