இரட்டை குழந்தைகள் செஞ்ச க்யூட் வேலையைப் பாருங்க.. அடடே என்ன அழகு…

இரட்டை குழந்தைகள் செஞ்ச க்யூட் வேலையைப் பாருங்க.. அடடே என்ன அழகு…

Follow us on Google News Click Here

இரட்டை குழந்தைகள் இருவர் பால் குடிக்க மோதிக்கொள்ளும் காட்சி இணையத்த்தில் வெளியாகி தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வைரலாகிறது.

பொதுவாக இரண்டு பிள்ளைகள் இருக்கும் வீடுகள் விடுமுறை காலங்களில் அமளிதுமளிப்படும். அதிலும் இரட்டை பிள்ளைகள் இருக்கும் வீடுகள் பற்றி கேட்கவே வேண்டாம். இரு பிள்ளைகள் இருக்கும் வீடுகளில் அம்மா…இவன் அடிச்சுட்டான். அவன் கிள்ளிட்டான் என புகார்களும் ஏராளம் வரும். அதிலும் இரட்டை பிள்ளைகள் இருக்கும் வீடுகளில் க்யூட்னெஸிற்கு பஞ்சம் இருக்காது.

இந்த உலகில் விலை மதிக்கவே முடியாதது பிள்ளையின் புன்னகை தான். பிள்ளைகள் எது செய்தாலும் அழகுதான். , பிள்ளைகள் செய்யும் குறும்புத்தனங்களைப் பார்த்துக்கொண்டு இருந்தாலே நேரம் போய்விடும். அதனால் தான் குழல் இனிது யாழ் இனிது என்பர். தன் மக்களின் மழலை சொல்லை கேட்காதவர்கள் எனத் தொன்றுதொட்டு சொல்லப்படுகிறது.

பிள்ளைகளின் உலகமே குதூகலமானது. ஒரு கூடை நிறைய பூக்கள் பூத்தால்கூட ஒரு பிள்ளையின் சிரிப்புக்கு ஈடு ஆகாது எனச் சொல்லும் அளவுக்கு பிள்ளைகள் உற்சாகத்துள்ளல் போடுவார்கள். அதிலும் மூன்று வயதுவரை அவர்கள் செய்யும் செயல்கள் ஒவ்வொன்றும் மிகுந்த ரசனைக்குரியதாக இருக்கும். ‘அழகுக்குட்டி செல்லம் உன்னை அள்ளித்தூக்கும் போது..பிஞ்சு விரல்கள் மோதி’ எனத் தொடங்கும் பிரித்விராஜின் திரைப்பட பாடலில் பிள்ளைகளின் அழுகை, சிரிப்பு என பல்வேறு கோணங்களையும் காட்சிப்படுத்தி இருப்பார்கள். அதைப் பார்த்தாலே நம்மையும் அறியாமல் புத்துணர்ச்சி வரும்.

பிள்ளைகளின் செய்கைகளைப் பார்த்தாலே நமக்கு நேரம் போவதும் தெரியாது. எந்த கஷ்டமான சூழலில் நாம் இருந்தாலும் பிள்ளைகளோடு இருந்தால் அந்த வலி பஞ்சாகப் பறந்து போகும். இங்கேயும் அப்படித்தான் இரட்டை பிள்ளைகள் ஒரு செயலை செய்கிறது. நம்மையும் அறியாமல் மனம் அந்தக் பிள்ளையின் மேல் லகித்துப் போய்விடுகிறது. அப்படி அந்தக்பிள்ளைகள் என்ன செய்கிறது எனக் கேட்கிறீர்களா?

இரட்டைக் பிள்ளைகளின் தாய் தன் ஒரு மகளுக்கு பீடிங் பாட்டிலில் பால் கொடுக்கிறார். அதைப் பார்த்த இன்னொரு பிள்ளை உடனே அந்தக் பிள்ளைக்கு பால் கொடுப்பதைத் தடுத்து நிறுத்தி தான் பால் பாட்டிலைக் கேட்கிறது. இந்த பிள்ளைக்கு பால் பாட்டிலைக் கொடுத்ததும், மீண்டும் அந்தக் பிள்ளை அதே போல் பாலை குடிக்கவிடாமல் தடுத்து தனக்குக் கேட்கிறது. குறித்த இந்தக் காட்சி இணைய த்தில் செம வைரலாகி வருகிறது. பாலுக்காக இரட்டைக் பிள்ளைகள் தங்களுக்குள் செல்ல சண்டை போடும் இந்தக் காட்சிகள் உங்களையும் அறியாமல் சிரிக்கவைக்கும். இதோ நீங்களே இந்த காட்சியைப் பாருங்களேன்.

Follow us on Google News Click Here

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...