இரை தேட முடியாத அளவுக்கு வயதான தாய் பறவைக்கு குஞ்சுகள் இரை கொண்டு வந்து ஊட்டும் காட்சி

இரை தேட முடியாத அளவுக்கு வயதான தாய் பறவைக்கு குஞ்சுகள் இரை கொண்டு வந்து ஊட்டும் காட்சி

இரை தேட முடியாத அளவுக்கு வயதான தாய் பறவைக்கு குஞ்சுகள் இரை கொண்டு வந்து ஊட்டும் காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகிய தற்போது இணையத்தில் ஆக்கிரமித்துள்ளது.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அவர்களின் சின்னஞ் சிறிய பருவத்தில் மிகவும் பொறுப்போடு பார்த்துக் கொள்கிறார்கள். ஆனால் அதே பொறுப்போடு பிள்ளைகள் தங்கள் பெற்றோரின் முதுமையான காலத்தில் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதே வாழ்க்கைத் தத்துவம். ஆனால் அதை பலரும் தெளிவாகச் செய்வது இல்லை.

அதனால் தான் மூளைக்கொரு முதியோர் இல்லம் உருவாகிறது. முதியோர் இல்லங்களில் பெற்றோரை சேர்த்துவிடும் பிள்ளைகள் இன்று அதிகளவில் உள்ளனர். என்னதான் தங்களைப் பார்த்து, பார்த்து வளர்த்துவிட்டு, புத்தாடை வாங்கிக் கொடுத்து, விரும்பிய பண்டங்கள் எல்லாம் வாங்கிக்கொடுத்து பெற்றோர் மகிழ்ச்சியாக வைத்திருந்தாலும் அவர்களின் முதுமைப் பருவத்தில் எத்தனை பிள்ளைகள் கண்ணும், கருத்துமாக பார்த்துக் கொள்கிறார்கள் என்பதே கேள்விக்குறி.

அவர்களுக்கெல்லாம் பாடம் புகட்டுவது போல் இங்கே ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. குறித்த இந்தக் காட்சியில் வழக்கத்தைவிட ஒரு வித்தியாசமான சம்பவம் நடந்துள்ளது. வழக்கமாகவே குட்டிப்பறவைக்கு தாய்ப்பறவை உணவை சேகரித்து வந்து ஊட்டுவதைத் தான் பார்த்திருக்கிறோம். ஆனால், இங்கு தாய்ப்பறவை வயோதிகத்தால் பறக்க முடியாமல் ஒரு இடத்தில் இருக்கிறது. குட்டிப்பறவை அதற்கு உணவினை சேகரித்து தாய்ப்பறவையின் வாயில் ஊட்டி விடுகிறது. ஒன்றரை நிமிட இந்தக் காட்சியில் வாழ்க்கைத் தத்துவத்தையே இந்தப் பறவைகள் போதித்துவிடுகிறது.

இதையும் பாருங்க:  திருமண நிகழ்ச்சியில் மகளுடன் அம்மா சேர்ந்து போட்ட செம டான்ஸ்

Related articles