இளைஞர்களுடன் சேர்ந்து கால்பந்து விளையாடிய மாடு.. பார்ப்பவர்களை வியக்க வைத்த வைரல் காட்சி..!

இளைஞர்களுடன் சேர்ந்து கால்பந்து விளையாடிய மாடு.. பார்ப்பவர்களை வியக்க வைத்த வைரல் காட்சி..!

கேரளாவில் மாடு ஒன்று தெருவில் கால்பந்து விளையாடும் வீடியோ ஒன்று இணையத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வைரலாகி வருகிறது.

கிரிக்கெட் போட்டி வர்ணனையாளர் ஹர்ஷா போகல் உள்பட பலரும் இந்த வீடியோவினை பகிர்ந்துள்ளனர். ட்விட்டரில் “This is the funniest thing you will see today!” என்னும் தலைப்பில் அவர் பகிர்ந்த இந்த வீடியோ, வெறும் 13 மணி நேரத்தில் சுமார் 51,000 லைக்ஸ்களை குவித்துள்ளது. அதேவேளையில் சுமார் 16000 மறுட்விட்களையும் பெற்றுள்ளது. இந்த எண்ணிக்கை தற்போதும் குறையாமல் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

சுமார் 2 நிமிடங்கள் நீடிக்கும் இந்த வீடியோவில்., பசு ஒன்று மைதானத்தில் விளையாடிக்கொண்டு இருக்கும் இளைஞர்களின் கால்பந்தினை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறது.

பசுவிடம் இருந்து கால்பந்தை மீட்க இளைஞர்கள் கடும் முயற்சியில் ஈடுபடுகின்றனர், எனினும் பயனில்லை. ஒரு கட்டத்தில் பசுவிடம் இருந்து இளைஞர்கள் கால்பந்தை மீட்க, மீட்கப்பட்ட கால்பந்தை மீண்டும் மீண்டும் பசு துரத்துகிறது. இச்சம்பம் அங்கிருந்து இளைஞர்களை மட்டும் அல்லாமல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் பாருங்க:  பாடலுக்கு ஏற்றாற்போல் துள்ளி குதித்து ஆட்டம்போட்ட பறவை

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...