உங்கள் பிறந்ததேதியை வைத்து நீங்கள் முன் ஜென்மத்தில் எப்படி இருந்தீர்கள் என தெரிஞ்சுக்கலாம்…!

உங்கள் பிறந்ததேதியை வைத்து நீங்கள் முன்ஜென்மத்தில் எப்படி இருந்தீர்கள் என தெரிஞ்சுக்கலாம்.
போன பிறவியில் நாம் எப்படி இருந்தோம் என்பதை தெரிந்துகொள்ள அனைவருக்குமே ஆர்வம் இருக்கும். இதோ உங்களுக்காகவே இந்த செய்தித்தொகுப்பு.

எண் 1
உங்களை தியாகம் செய்து மற்றவர்களை மகிழ்விப்பீர்கள். உங்களுக்கு போன பிறவியில் சுயமரியாதை, சுயமதிப்பு மிகவும் குறைவாக இருந்திருக்கும். இந்த பிறவியில் அதை சரியாக உணரநேரம் என நினைத்துக் கொள்ளுங்கள்.
எண் 2
போன பிறவி பொருள்தேடி அலையும் நிலை இருந்திருக்கும். போன பிறவி முழுவதும் பணம், பொருள் தேடி ஓடிவிட்டீர்கள். இந்த பிறவியில் அதை உணர்ந்து எஞ்சிய காலத்தை மகிழ்ச்சியோடு கழியுங்கள்
எண் 3
அசெளரிய மனநிலை, அச்சம், சுயமதிப்பு குறைபாடு ஆகியவற்றோடே கடந்த பிறவி நகர்ந்திருக்கும். அடக்குமுறையால் உங்கள் தனித்தன்மையை வெளிப்படுத்த முடியாமல் இருந்திருப்பீர்கள்.
எண் 4
போன பிறவியில் குடும்ப ரீதியாக சாந்தோசம் இன்றி இருந்திருப்பீர்கள். சிலர் அநாதையாகவும், கைவிடப்பட்ட நிலையிலும் கூட இருந்திருப்பார்கள். போன பிறவியில் இழந்த சந்தோசத்தை இப்போது மீட்டெடுங்கள்.
எண் 5
போன பிறவியில் சுயநலமியாகவும், தேவைக்கு ஏற்ப செயல்படுபவராகவும் இருந்திருப்பீர்கள். உங்களுக்கு தேவையானதை செய்யாதவரை நீங்கள் மதிப்பதில்லை. இந்த ஜென்மத்தையும் அப்படிக் கடத்தாமல் பிறருக்காக வாழத் தொடங்கியிருப்பீர்கள்.
எண் 6

போன பிறவியில் அடிக்கடி உடல், மனநலக் கோளாறால் அவதிப்பட்டு இருப்பீர்கள். வாழ்க்கை முழுவதும் ஒருவித கைவிடப்பட்ட நிலையில் தான் நகர்ந்திருப்பீர்கள். அன்புக்காக ஏங்கி இருப்பீர்கள்.
எண் 7
போன பிறவியில் மற்றவர்களுடன் இணைந்து வாழ்வதில் உங்களுக்கு பெரும் போராட்டம் இருந்திருக்கும். மிகச்சுதந்திரமாகவும், பெயரை உயர்த்தவும் ஓடிக்கொண்டே இருந்திருப்பீர்கள்.
எண் 8
கடந்தகாலத்தில் உங்கள் பொறுப்புகளை தட்டிக் கழித்திருப்பீர்கள். இந்த ஜென்மத்திலும் இது முற்காலத்தில் தொடர்ந்திருக்கும். சாதிக்க நினைப்பதைவிட, வாழ்வை நகத்திச் செல்லவே நீங்கள் விரும்புகிறீர்கள்.
எண் 10

போன பிறவியில் உங்களுக்கு பெரிதாக எந்த நன்மையும் நடக்கவில்லை. ஆனால் இந்த பிறவி உங்களுக்கு அழகானது.
எண் 11
போன பிறவியில் வசதியாக இருந்திருப்பீர்கள். அடக்கமாக இருந்தாலும், உங்களிடம் மகிழ்ச்சி குறைவாகவே இருந்தது. உங்கள் சாதனையின் உண்மையான உணர்வை நீங்கள்பெற உங்கள் வசதி, தன்னிறைவை அடகு வைக்கலாம்.
என் 22
உங்களிடம் அதீத திறமை இருந்தது. ஆனால் அதை நீங்கள் வெளிக்காட்டவே இல்லை. இந்த பிறவியில் உங்களுக்குள் இருக்கும் திறமையை வெளியே கொண்டு வாருங்கள்.