உலகிலேயே மிகக் குள்ளமான பசு!! பசுவை காண அலைமோதும் மக்கள் கூட்டம்! அதிசய பசுவின் வீடியோ இதோ!

உலகிலேயே மிகக் குள்ளமான பசு!! பசுவை காண அலைமோதும் மக்கள் கூட்டம்! அதிசய பசுவின் வீடியோ இதோ!

Follow us on Google News Click Here

51 செ.மீ மட்டுமே உயரம் கொண்ட பசுமாடு ஒன்று உள்ளது. உலகைன் மிக குள்ளமான இந்த பசுமாட்டை காண திரளானோர் குவிந்து வருகின்றனர்.

வங்கதேசத்தில் டாக்காவில் இருந்து 30 கி.மீட்டர் தொலைவில் உள்ள சாரிகிராமில் உள்ள வேளாண் பண்ணியில் இந்த பசு இருக்கிறது. ஷிகோர் எனபவருக்கு சொந்தமான இந்த வேளாண் பண்ணையில் திரளானோர் வந்து அதிசய பசுவை பார்த்து செல்கின்றனர்.

51 செ.மீ நீளமுள்ள இந்த பசு பின் எடை 26 கிலோ கிராம் மட்டுமே . இந்த பசுதான் உலகின் மிகக்குள்ளமான பசு என்று சொல்லப்படுகிறது. இதற்கு முன்னர் உலகின் மிகக் குள்ளமான பசு என்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ள பசுவை விட இந்த பசு பத்து செ.மீ குறைவு என்று சொல்லப்படுகிறது.

கேரளாவை சேர்ந்த மாணிக்யம் எனும் பசு தான் உலகின் குள்ளமான பசு என்று கின்னஸ் உலக சாதனை அமைப்பு கடந்த 2014ஆம் ஆண்டு அங்கீகரித்தது. இந்தப் பசுவின் உயரம் 61 சென்டி மீட்டர் ஆகும். ஆனால் தற்போது ராணி பசுவின் உயரம் 51 சென்டிமீட்டர் தான் என்பது தெரிய வந்துள்ளதால், உலகின் மிக குள்ளமான பசு என்கிற விவரம் வெளியாகி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியதால் அந்த பசுவை பார்த்து ரசிக்கவும் செல்பி எடுக்கவும் பல்லாயிரக்கணக்கானோர்குவிந்து வருகின்றனர்.

கொரோனா தொற்று நோய் பரவல் காரணமாக, பல்லாயிரக்கணக்கானோர் குவிந்து வருவதால் அத்தனை பேரையும் அனுமதிக்க வேண்டாம் என்று பண்ணையின் உரிமையாளருக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ஆனாலும் இந்த தடைகளை எல்லாம் மீறி பொதுமக்கள் ஆர்வத்துடன் பண்ணையை நோக்கி படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Follow us on Google News Click Here

கருத்தை சொல்லுங்கள் ...

error: Content is protected !!