எனக்கு திருமணம் செஞ்சு வைங்க… அம்மாவிடம் அழுது அடம்பிடித்த சிறுவன்.. வைரல் காட்சி..!

எனக்கு திருமணம் செஞ்சு வைங்க… அம்மாவிடம் அழுது அடம்பிடித்த சிறுவன்.. வைரல் காட்சி..!

கூகிள் செய்தியிலும் எங்கள் செய்தியை படிக்கலாம் Follow Now

தனக்குத் கல்யாணம் செய்து வைக்கச் சொல்லி தன் அம்மாவிடம் சிறுவன் ஒருவன் அடம்பிடித்து அழும் காணொளி இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. இதுகுறித்துத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

குழல் இனிது யாழ் இனிது என்பர் தன் மக்கள் மழலை சொல் கேளாதவர்’ என்கிறது பழமொழி. குழந்தைகள் செய்யும் எந்த ஒரு செயலுமே வெகுவாக கவனிக்க வைத்துவிடுகிறது. நம்மை மிகவும் ரசனைக்குரியதாகவும் அது மாற்றி விடுகிறது. அதனால் தான் குழந்தைகளின் காணொளிக்களும், வெள்ளந்தி குணமும் அவ்வப்போது இணையத்தில் டிரெண்டாகி விடுகிறது.

குழந்தைகளின் உலகமே குதூகலமானது. ஒரு கூடை நிறைய பூக்கள் பூத்தால்கூட ஒரு குழந்தையின் சிரிப்புக்கு ஈடு ஆகாது எனச் சொல்லும் அளவுக்கு குழந்தைகள் உற்சாகத்துள்ளல் போடுவார்கள். அதிலும் மூன்று வயதுவரை அவர்கள் செய்யும் செயல்கள் ஒவ்வொன்றும் மிகுந்த ரசனைக்குரியதாக இருக்கும்.

‘அழகுக்குட்டி செல்லம் உன்னை அள்ளித்தூக்கும் போது..பிஞ்சு விரல்கள் மோதி’ எனத் தொடங்கும் பிரித்விராஜின் திரைப்பட பாடலில் குழந்தைகளின் அழுகை, சிரிப்பு என பல்வேறு கோணங்களையும் காட்சிப்படுத்தி இருப்பார்கள். அதைப் பார்த்தாலே நம்மையும் அறியாமல் புத்துணர்ச்சி வரும்.

இங்கே ஒரு குழந்தை செய்த செயல் இணையத்தில் செம வைரலாகி வருகிறது. அந்தக் குழந்தை அப்படி என்ன செய்தது எனக் கேட்கிறீர்களா? இங்கே 90ஸ் கிட்ஸ்களே இன்னும் பெண் கிடைக்காமல் பாடாய் பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்படியான சூழலில் இங்கே மூன்று வயதே ஆன குட்டிக் குழந்தை ஒன்று தன் அம்மாவிடம் தனக்கு உடனே கல்யாணம் செய்து வைக்கச் சொல்லி அழுகிறது.

கேரளத்தில் தான் இப்படி ஒரு சம்பவம் நடந்தது. இந்த குழந்தையின் அழுகையைத் தேற்றிய அதன் தாய் இந்த வயதில் பெண் கிடைக்காது. எனச் சொல்கிறார். உடனே அதற்கு அந்தக் குழந்தை அதெல்லாம் கிடைக்கும் என பெண் பார்த்து உடனே கல்யாணம் செய்துவை என அழுகிறது. குறித்த இந்தக் காட்சி இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. இதோ நீங்களே பாருங்கள்.

இதுபோன்ற சிறப்பான , தரமான செய்திகளை டெலிக்ராம் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள் Join Now

கூகிள் செய்தியிலும் எங்கள் செய்தியை படிக்கலாம் Follow Now

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...

error: Content is protected !!