என்னை ஏன் பிக் பாஸுக்கு கூப்பிட்டாங்க தெரியுமா?: வனிதா

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தனக்கு ஏன் வாய்ப்பளித்தார்கள் என்று வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் 3 வீட்டில் இருந்து இரண்டாவது ஆளாக வெளியேற்றப்பட்டார் வனிதா விஜயகுமார். அவர் இவ்வளவு சீக்கிரத்தில் வெளியேற்றப்படுவார் என்று பார்வையாளர்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை. அவர் கிளம்பிச் சென்ற பிறகு பிக் பாஸ் கொடூர மொக்கையாக இருப்பதாக பார்வையாளர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் பிக் பாஸ் குறித்து வனிதா பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது,
குழந்தைகள் தொலைக்காட்சி, செல்போன் இல்லாமல் இருந்தது எனக்கு பெரிய கஷ்டமாக தெரியவில்லை. நான் செல்போனும், கையுமாக இருக்கும் ஆள் இல்லை. என் குழந்தைகளை விட்டுவிட்டு இருந்தது தான் கஷ்டமாக இருந்தது. மேலும் என் மகள் யாருடன் இருப்பது என்பது குறித்த சட்ட பிரச்சனை வேறு சென்று கொண்டிருக்கிறது..
பிக் பாஸ்
இவ்வளவு சீக்கிரத்தில் நான் வெளியேற்றப்பட்டது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இருப்பினும் நான் தான் வெளியேற்றப்படுவேன் என்று எனக்கு தோன்றியது. என் குழந்தைகளை மீண்டும் பார்த்ததில் மகிழ்ச்சியாக உள்ளது. நான் இல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சி போர் அடிப்பதாக சமூக வலைதளங்களில் போடப்பட்டுள்ள போஸ்ட்டுகளை பார்த்தேன். மக்கள் என்னை மிஸ் பண்ணுவது மகிழ்ச்சியாக உள்ளது.
பிக் பாஸ் 3
பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் 2 சீசன்களின்போதும் என்னை அழைத்தார்கள். நான் சர்ச்சை பார்ட்டி என்பதால் என்னை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வைக்க முயற்சி செய்துள்ளனர் என்று நினைக்கிறேன். நான் மனதில் பட்டதை பேசிவிடுவேன் அதை தான் சர்ச்சை என்று சொன்னேன். ஏதாவது பிரச்சனை என்றால் அதை கண்டும் காணாமல் போக என்னால் முடியாது.
சமரசம்
பிக் பாஸ் வீட்டில் நாள் முழுக்க நிறைய நடக்கிறது. ஆனால் அதை எல்லாம் எடிட் செய்து ஒரு மணிநேரம் மட்டும் காண்பிப்பது நியாயம் இல்லை. நான் யாருடனாவது வாக்குவாதம் செய்த பிறகு அவர்களுடன் நன்றாக பேசியிருக்கலாம். ஆனால் அதை பார்வையாளர்களுக்கு காட்டாததால் அவர்களுக்கு தவறான எண்ணமே ஏற்படும்.
பெக் பாஸ்(Beg Boss)
அழுகிற குழந்தைக்கு தான் பால் கிடைக்கும் என்று என் பெற்றோர் கற்றுக் கொடுத்துள்ளனர். அது உண்மையே. பிக் பாஸுக்கும் அது பொருந்தும். எங்கள் தேவைக்காக பிக் பாஸிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறோம். ஒரு வகையில் இது Beg Boss தான். பிக் பாஸ் வீட்டில் நடப்பதை மக்கள் இவ்வளவு சீரியஸாக எடுத்துக் கொள்வது அதிர்ச்சி அளிக்கிறது. நாங்கள் பிக் பாஸ் வீட்டில் ஒரு குடும்பமாக வாழ்ந்தோம், சண்டை போட்டோம், சிரித்தோம், அழுதோம் என்கிறார் வனிதா.