என்ன ஒரு தொழில் பக்தி!! கட்டிய வீட்டின் மீது தனக்கு வருமானத்தை கொடுத்த சின்னத்தை நிறுவிய உரிமையாளர்

என்ன ஒரு தொழில் பக்தி!! கட்டிய வீட்டின் மீது தனக்கு வருமானத்தை கொடுத்த சின்னத்தை நிறுவிய உரிமையாளர்

என்ன ஒரு தொழில் பக்தி!! கட்டிய வீட்டின் மீது தனக்கு வருமானத்தை கொடுத்த சின்னத்தை நிறுவிய உரிமையாளர் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கனவு வீட்டை கட்டுவதற்கு பலரும் பாடுபட்டு சிறுக சிறுக பணத்தை சேமித்து கனவு இல்லத்தை கட்டுவார்கள். இன்றைய காலகட்டத்தில் பலரும் வாஸ்து பார்த்து வீட்டினை கட்டுவது வழக்கமாக உள்ளது. கப்பல் போன்று வீட்டினை கட்டுபவர்களும் இருக்கிறர்கள், தங்குவதற்ககு வீடு வேண்டுமே…… என சிம்பிளாக தன்னால் முடித்த அளவு பணத்தை கொண்டு வீடு கட்டுபவர்களும் இருக்கிறார்கள். அரண்மனை போல் வீடு அமைத்தாலும், சிறியதாக வீடு அமைத்தாலும் அவரவர் வீடு அவரவர்களுக்கு அரண்மனை என்று தான் சொல்ல வேண்டும். எறும்புகள், கரையான்கள் முதல் தூக்கணாங்குருவி வரை அந்தந்த உயிரினங்கள் தங்களுக்கு பிடித்த மாதிரி வசதிக்கேற்ப கூட்டினை அமைத்து கொள்ளும் என்பது விதி.

தூக்கணாங் குருவிககளில் ஆண் குருவி கூட்டினை கட்டும். அதன் வேலைப்பாடு தற்கால தொழில்நுட்ப துறைக்கே சவால் விடும். தடிமனான பெரிய துரும்புகள் ,குச்சிகள் கொண்டு வெளிப்புறத்தினையும், உட்புறம் சற்று மென்மையாக இருக்க வேண்டி சிறகுகள் அமைக்கும், மேலும் களிமண் கொண்டு உட்புறம் பலப்படுத்தும். இவ்வாறு அனைத்து உயிரினகளும் தங்கள் விருப்பத்திற்கேற்ப வீட்டினை கட்டுகிறர்கள்.

இந்த காணொலியில் உள்ள வீட்டில் தண்ணீர் தொட்டி அமைப்பிற்க்கு பெரிய லாரி ஒன்றினை கட்டி வைத்திருக்கிறர்கள் . இதை பார்ப்பதற்கு ஆச்சர்யமாகவும், வித்தியாசமாகவும், அதிசயமாகவும் உள்ளது. இதை கட்டியவர்களின் கலை திறனையும், அவரது ரசனையையும் சமூக வலைதளவாசிகள் பாராட்டி வருகின்றனர். உங்களுக்கும் இந்த வீட்டின் லாரி தண்ணீர் தொட்டி பிடித்திருந்தால் கமெண்டில் தெரிவிக்கவும்.

இதையும் பாருங்க:  " தாமரை பூத்திருக்கு மச்சான் " மேடையில் திருநெல்வேலி பெண்கள் போட்ட செம டான்ஸ்

கருத்தை சொல்லுங்கள் ...