என் முகத்தில் சிறுநீர்பெய்து செருப்பால் அடித்தனர் – காதல்கல்யாணம் செய்தவரின் உறவினருக்கு சாதி கொடுமை!

என் முகத்தில் சிறுநீர்பெய்து செருப்பால் அடித்தனர் – காதல்கல்யாணம் செய்தவரின் உறவினருக்கு சாதி கொடுமை!

வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை லவ் திருணம் செய்து கொண்ட இளைஞரின் உறவினர்களை கடத்தி சென்று மது குடிக்க வைத்து அடித்து துன்புறுத்தியதாக போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த பன்னிப்பட்டி கிராமத்தில் இருளர் இனத்தைசேர்ந்த முனிராஜ் என்பவரின் மகன் 19 வயதுடைய ரமேஷ், டிப்ளமோ படித்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த வேறு சமூகத்தைச் (கொங்குவேளாளர்) சேர்ந்த கதிரியப்பன் என்பவரின் 21 வயதுடைய மகள் மோகனா, பி.காம் முடித்துள்ளார். இவர்கள் இருவரும் வயது வேறுபாடுயின்றி காதலித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 10 ஆம் தேதி அன்று இருவரும் கல்யாணம் செய்துகொள்ள ஊரை விட்டு தலைமறைவானார்கள். இதனால் மோகனாவில் பெற்றோர் மாரண்டஅள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 12 ஆம் தேதி மோகனாவின் உறவினர்கள் சிலர் ரமேஷின் உறவினர்கள் மூன்று பேரை அருகே உள்ள எல்லப்பன் பாறை மாந்தோப்பிற்கு காரில் கடத்தி சென்று அடித்து உதைத்து மது குடிக்க வைத்தும், முகத்தில் சிறுநீர் கழித்தும், செருப்பால் அடித்துள்ளனர்.

இதில் ஒருவர் தப்பி ஓடி உள்ளார். அவர்களில் இருவரின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் அப்பகுதி மக்கள் வந்து மீட்டு காயமடைந்த இரண்டு பேரையும் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

இது குறித்து ரமேஷின் உறவினர்கள் பாலக்கோடு போலீஸ் துணை கண்காணிப்பாளரிடம் தாக்கியவர்கள் மீது எஸ்.சி.,எஸ்டி., வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் மேலும் தங்கள் பகுதியில் இருளர் இன மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என புகார் அளித்தனர்.

இதையும் பாருங்க:  ஆன் கலைஞருடன் போட்டி போட்டு தவில் வாசித்து அசத்திய இளம்பெண்

இந்த புகார் குறித்து போலீஸ்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இருளர் இன இளைஞரின் உறவினரை சிறுநீர் குடிக்க சொல்லி துன்புறுத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கருத்தை சொல்லுங்கள் ...