என் வாழ்வில் இதை மறக்க முடியாது : விஜே பிரியங்கா

என் வாழ்வில் இதை மறக்க முடியாது : விஜே பிரியங்கா

Follow us on Google News Click Here

டீவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள், சீரியல்கள் எல்லாம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனால் ஒவ்வொரு தொலைக்காட்சிம் போட்டி போட்டுக் கொண்டு தங்களுடைய சேனல்களில் போட்டி போட்டுக் கொண்டு வித்யாசமான தொடர்களையும், நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பி வருகின்றனர்.

சினிமா பிரபலங்களை விட சீரியல் நடிகர்களும், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் விஜேகளுக்கும் மக்கள் மனதில் நிற்கிறார்கள். அந்த வகையில் தமிழ் டீவிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் மூலம் நிறைய விஜேகள் மக்களுக்கு பரிச்சயமானவர்கள் நிறைய பேர் உள்ளனர்.

அந்த வரிசையில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி தொகுப்பாளினியாக மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் பிரியங்கா.விஜய் டீவியில் தொகுப்பாளினியாக இருக்கும் பிரியங்காவுக்கு அறிமுகமே தேவை இல்லை. தனது கலக்கலான காமெடி பேச்சோடு கூடிய தொகுத்து வழங்கலால் பட்டி, தொட்டியெங்கும் ரீச் ஆனவர் பிரியங்கா.

துவக்கத்தில் தனியார் வானொலி நிலையம் ஒன்றில் வேலை செய்து வந்த பிரியங்கா, மா.கா.பா மூலமாக சின்னத்திரை தொகுப்பாளராக வந்தார். அதிலும் விஜய் தொலைக்காட்சியில் அவர் தொகுத்து வழங்கிய விதம் அவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது.

தற்போது அவர், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அந்நிகழ்ச்சியில் பொதுவாக பலரும் அவரை கலாய்ப்பது வழக்கம்.ஆனால் என்னதான் கலாய் கலாய்த்தாலும் சளைக்காமல் ஈடுகொடுப்பர் ப்ரியங்கா.

இந்தநிலையில் சமீபத்தில் ஒளிபரப்பான வால் எனும் ரியாலிட்டி ஷோவை பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.அவர் தன்னுடைய வாழ்க்கையில் அனுபவித்த கஷ்டங்களை குறிப்பிட்டுள்ளார். அதற்காக பிரியங்கா கண்ணீர் விட்டு பேசியுள்ளார்.இந்த எபிசோடை என் வாழ்க்கையிலேயே மறக்க முடியது என ட்விட்டரில் அவர் தெரிவித்துள்ளார்.

Follow us on Google News Click Here

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...

error: Content is protected !!