ஒருதலை காதல் !! இளம்பெண் குறித்து ஆபாச பதிவு செய்த இளைஞர் கைது

ஒருதலை காதல் !! இளம்பெண் குறித்து ஆபாச பதிவு செய்த இளைஞர் கைது

Follow us on Google News Click Here

 இளைஞர் (22 வயது) ஒருவர் ஃபேஸ் புக்கில் போலி கணக் கை தொடங்கி இளம்பெண்ணை வைத்து  ஆபாச பதிவுகள் வெளியிட்டதால் கைது செய்யப் பட்டுள்ளார். 

மத்தியப்பிரதேச மாநிலம் ஜபால்பூர் மாவட்டத்தில் பிரசாந்த் ராஜக் என் னும் 22 வயது இளை ஞர் ஒருவர் 27 வயது இளம் பெண் ஒருவரை ஒரு தலையாக காதலித் துள்ளார். பின்னர் அவரிடம் சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளும்படியும் வலியுறுத் தியுள்ளார். ஆனால் அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவி த்துள்ளார். இந்நிலையில் அந்த பெண் ணிற்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சய மாகியுள்ளது.

இதனால் ஆத்திர மடைந்த பிரசாந்த் ராஜக், சமூக வலை தளமான ஃபேஸ்புக்கில் அந்த இளம் பெண்ணின் பெயரிலேயே கணக்கு ஒன்றை தொடங்கி யுள்ளார். மேலும் அந்த ஃபேஸ்புக்  கணக்கில் அந்த பெண்ணின் புகைப் படத்தை மார்பிங் செய்து, ஆபாச பதிவுகளை வெளியுட் டுள்ளார். இந்த சம்பவம் குறித்து அந்த இளம்பெண் சைபர் க்ரைம் போலீசாரிடம் புகார் அளித் துள்ளார்.

இந்த புகாரின் அடிப் படையில், போலீசார் பிரசாந்த் ராஜக்கை கைது செய்து விசார ணையை நடத்தினர். அப்போது தான் ஒரு தலையாக காதலித்து வந்த பெண், வேறு ஒருவரை திரு மணம் செய்ய இருப்பதால், அந்த பெண் ணுக்கு அவப்பெயர் ஏற்படுத்தி திருமண த்தை நிறுத்த வேண்டும் என்பதற் காகவே இவ்வாறு செய்ததாக கூறியுள்ளார். இதனால் பிரசாந்தின் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை சிறை-யில் அடைத்தனர்.

Follow us on Google News Click Here

கருத்தை சொல்லுங்கள் ...