ஒரே ஒரு பார்வையில் இணைய உலகத்தை வென்ற குழந்தை

ஒரே ஒரு பார்வையில் இணைய உலகத்தை வென்ற குழந்தை

ஒரே ஒரு பார்வையில் இணைய உலகத்தை வென்ற குழந்தையின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் ஏகோபித்த ஆதரவை பெற்று தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வைரலாகி வருகிறது.

குழந்தைகளின் உலகம் மிக, மிக அலாதியானது. வாயில் இருந்து தவற விடும் வார்த்தைகள்கூட குழந்தைகளால் அழகாகிறது. அதனால்தான் அவைகூட ரசிக்க முடிகிறது. இந்த உலகில் நாம் எத்தனை முறைப் பார்த்தாலும் சலிக்காத காட்சிகளில் ஒன்றுதான் குழந்தைகளின் நடனம். அவர்களின் நடனம் நம்மையும் அறியாமல் வெகுவாக ரசிக்க வைத்துவிடும்.

‘குழல் இனிது யாழ் இனிது என்பர் தன் மக்கள் மழலை சொல் கேளாதவர்’ என்கிறது பழமொழி. குழந்தைகள் செய்யும் எந்த ஒரு செயலுமே வெகுவாக கவனிக்க வைத்துவிடுகிறது. நம்மை மிகவும் ரசனைக்குரியதாகவும் அது மாற்றி விடுகிறது. அதனால் தான் குழந்தைகளின் வீடியோக்களும், வெள்ளந்தி குணமும் அவ்வப்போது இணையத்தில் டிரெண்டாகி விடுகிறது.

இங்கேயும் ஒரு குட்டிதேவதை செய்த செயல் இணையத்தில் தீயாகப் பரவிவருகிறது. அப்படி, அவர் என்ன செய்தார் எனத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.குட்டிக் குழந்தை ஒன்று தன் அப்பா, அம்மாவோடு பைக்கில் சென்று கொண்டிருக்கிறது. அந்தக் குட்டிக் குழந்தையை அதன் அம்மா மடியில் வைத்திருக்கிறார். அந்தக் குழந்தை பின்னால் பார்த்து திரும்பி இருக்கிறது. அந்தக் குட்டிக் குழந்தை பின்னால் பைக்கில் டிராபிக் சிக்னலில் நிற்பவரைப் பார்த்து செம க்யூட்டான ஒரு ரியாக்சன் கொடுக்கிறது. தன் கண்ணின் புருவங்களை மட்டும் தூக்கி, அந்தக் குட்டிக்குழந்தை மிகவும் க்யூட்டாக பின்னால் இருப்பவரை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது. இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன்.

இதையும் பாருங்க:  கேரள பெண்கள் வேட்டியை மடித்து கட்டி போட்ட செம டான்ஸ்

Related articles