ஓ சாமி பாடலுக்கு ரஷ்மிகா போல் நடனமாடி அசத்திய சிறுமி

ஓ சாமி பாடலுக்கு ரஷ்மிகா போல் நடனமாடி அசத்திய சிறுமி

ஓ சாமி பாடலுக்கு ரஷ்மிகா போல் நடனமாடி அசத்திய சிறுமியின் வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.

புஸ்பா படம் வெளிவந்த நாளில் இருந்து அந்த படத்தை சார்ந்த ஏதாவது ஒரு விஷயம் வைரல் ஆகி வரும். இந்த படத்தில் உள்ள பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆகியது. அதிலும் குறிப்பாக சாமி…. சாமி…. பாடல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆட்டம் போட தூண்டியது.இந்த படத்தில் நடித்த நடிகை ராஸ்மிகா மந்தனாவின் முக பாவனைகளுக்கென்றே ரசிகர்கள் கூட்டம் இருக்கும்.

அந்தளவுக்கு அவரின் நடிப்பு திறமை வெளிப்படும். தற்போது அவர் முன்னணி கதாநாயகியாக தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற திரை துறைகளில் தடம் பதித்து திறமையை வெளிக்காட்டி வருகிறார். சமீபத்தில் அல்லு அர்ஜுன் கதாநாயகனாக, ரஸ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்த புஸ்பா படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மாநில மொழிகளில் வெளியிடப்பட்டு சூப்பர் ஹிட்டானது..

இந்த கானொலியில் பள்ளி சீருடை அணிந்த சிறுவர்கள் மற்றும் சிறுமியர் புஸ்பா பட பாடலான சாமி.. சாமி… பாடலுக்கு படத்தில் உள்ளது போன்றே நடன அசைவுகளுடன் நடனம் ஆடினர். அதிலும் சிறுமி ஒருவரின் நடன அசைவுகள் கதாநாயகியையே மிஞ்சும் விதமாக நடனம் ஆடினார். பாடல் வரிகளையும் உச்சரித்தவாறு முக பாவனைகளும் அதற்கேற்ப மாற்றி கொண்டு நடனம் ஆடியது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த கானொலியானது டிமர்புர் MLA திலீப் பாண்டே அவர்கள் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

இதையும் பாருங்க:  அரசுப்பள்ளி மாணவனின் அற்புத டான்ஸ்

கருத்தை சொல்லுங்கள் ...