கட்சி ஆரம்பித்தவர்கள் எல்லாம் வெற்றி பெற முடியாது: ரஜினியை தாக்கிய கனிமொழி

கட்சி ஆரம்பித்தவர்கள் எல்லாம் வெற்றி பெற முடியாது: ரஜினியை தாக்கிய கனிமொழி

கட்சி ஆரம்பித்தவர்கள் எல்லாம் வெற்றி பெற முடியாது என்று ரஜினி யை கனிமொழி தாக்கி பேசியுள்ளார்

ஸ்மார்ட் சிட்டி திட்டத் தில் பேருந்து நிலையம் கட்டுவதாக சொல்லி மணல் திருட்டு நடைபெற்றுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளுக்கு அரசுக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே ஒப்பந்தம் கொடுக்கப்பட் டுள்ளது. அரசை எதிர்த்து கேள்வி கேட்கும் எந்த நிகழ்வாக இருந்தாலும் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. எத்தனை வழக்கு பதிவு செய்தாலும் அதனை சந்திக்க தயராக இருக்குறோம்.

கொரனோ காலகட்டத்திலும் திமுக தலைவர் ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் அனைத்துப் பணிகளை யும் செய்து வருகிறார் . மக்கள் பணிகள் செய்வது தான் தலையாயக் கடமை. அதனை ஸ்டாலின் செய்து வருகிறார். தேர்தல் அறிக்கை தயார் செய் யும் பணி நடந்து வருகிறது.

ஜனவரியில் தேர்தல் அறிக்கை தயார் செய் யும் பணி நிறைவு பெறும். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். கட்சி ஆரம்பித்தவர்கள் எல்லாம் வெற்றி பெற முடியாது. திமுகவிற்கு வாக்களிக்க மக்கள் தயாராகி விட்ட னர். நல்லாட்சி அமைய வேண்டும் என மக்கள் முடிவெடுத்து விட்டார்கள். இனிமே யும் மக்கள் தங்களது வாக்குகளை வீணாக்க விரும்ப வில்லை”

இதையும் பாருங்க:  மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே புரியும் இந்த தருணம்

கருத்தை சொல்லுங்கள் ...