கட்சி பணிகள் இருப்பதால் ‘அண்ணாத்த’ குழுவுக்கு வேண்டுகோள் விடுத்த ரஜினி

கட்சி பணிகள் இருப்பதால் ‘அண்ணாத்த’ குழுவுக்கு வேண்டுகோள் விடுத்த ரஜினி

இயக்குனர் சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினி படக்குழுவினருக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

இயக்குனர் சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துவரும் படம் அண்ணாத்த. நயன் தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சூரி, சதீஷ் ஆகியோர் ரஜினியுடன் நடித்துவருகிறார்கள். கொரொனாவுக்கு முன்பாக முதல்கட்டப் படப்பிடிப்பை முடித்தனர். கொரொனாவுக்குப் பிறகு படப்பிடிப்பு தொடங்குவதில் சிக்கல் இருந்தது. ஏற்கெனவே 60 % படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், மீதம் இருக்கும் 40 % படப்பிடிப்பு இப்போது நடந்துவருகிறது.

 ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடக்கிறது. படக் குழுவினருக்கு ரஜினி ஒரு வேண்டுகோள் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பட ப்பிடிப்பை விரைவில் முடித்து விட்டு, ஜனவரி 10க்குள் அவருடைய வாய்ஸ் ஓவர் பணிகளையும் முடித்துவிட வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதன்பின் கட்சி பணிகளில் ஈடுபட திட்டமிட்டு இருப்பதால் இந்த வேண்டுகோளை வைத்துள்ளார் என்கிறார்கள் தகவல் அறிந்தவர்கள் .

இதையும் பாருங்க:  அழகாக பாடும் அற்புத குழந்தை

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...