கட்டிப்பிடித்து கதறி அழுத தங்கை…அக்கா தங்கை பாசத்திற்கு நிகர் இந்த உலகில் எதுவும் இல்லை!!

ஆயிரம் சண்டைகள் நம் உடன் பிறந்த உறவுகளுக்கு இடையே வந்தாலும் இறுதியில் தன் அக்கா,தங்கை,அண்ணா அல்லது தம்பி போன்ற ரத்த பந்தத்தில் உள்ளவர்களுக்கு ஏதேனும் நேர்ந்தால் நம்மை அறியாமலே நம் கண்கள் கலங்கி விடும்.

பாசம் என்ற ஒன்று இருந்தால் கல்லான மனதும் கரையும் மனிதன் மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன? இத்தகைய நம் உடன் பிறப்புகள் என்றுமே நம் வாழ்க்கைக்கு தேவையானவர்களே.

இந்த பதிவில் நம் ரத்த சொந்தமான அக்கா தங்கை சகோதரி பிறந்த நாள் வாழ்த்துகளை பார்ப்போம்.
அக்கா என்பவள் அன்னைக்கு அடுத்தபடியாக பார்க்கப்படுகிறாள். மூத்த பெண் என்பதால் அனைத்து கடமைகளும் அவளுக்கு உண்டு.

இயல்பாகவே தன் கூட பிறந்த இளையவர்களுக்காக விட்டு கொடுக்கும் மனப்பான்மை அவளுக்கு தானாகவே வந்து விடுகிறது.
அதிலும் ஏழை குடும்பமானால் சொல்லவே வேண்டாம் அனைத்துமே அவள் தான் செய்ய வேண்டும்.

தங்கை என்பவள் குடும்பத்தின் கடைக்குட்டியாக இருந்தாலும் பாசம் என்று வரும்போது அவளை போல் அன்பு காட்டுபவர்கள் யாரும் இல்லை அதே போல பிடிவாத குணங்களும் ஆங்காங்கே குவிந்திருக்கும்.