கணக்குகளை நீக்கும் ட்விட்டர் : உங்கள் கணக்கை பாதுகாப்பது எப்படி ?

Twitter ல் 6 மாதங்களுக்கும் மேல் பயன்பாட்டில் இல்லாத அக்கவுண்ட்களை நீக்கப்போவதாகவும் இந்த செயல்முறை டிசம்பர் 11 ஆம் தேதி தொடங்கும் என்றும் அந்நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.
இது ட்விட்டர் தளத்தில், நம்பகத்தன்மை வாய்ந்த மிகவும் துல்லியமான தகவல்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கவும் பயனாளர்களுக்கு கூடுதல் வசதிகளை தரும் நோக்கிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக இந்நிறுவனத்தின் (ட்விட்டர் )செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார். அதற்காக , பயன்பாட்டில் இல்லாத ட்விட்டர் அக்கவுண்ட்களை நீக்கும் பணி தொடங்கப்பட உள்ளது எனவும் மேலும் ட்விட்டர் புதிய வரைவு கொள்கைகளையும் தயார் செய்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்த எச்சரிக்கை அறிவிப்புகளை பயனாளர்களின் மின்னஞ்சல் (e-mail)அக்கவுண்ட்களுக்கு அனுப்பப்படும்.அதற்கு பிறகு தான் , நீக்கும் பணிகள் நடக்கும் என்றும் அந்நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.