கணவர் ரொம்ப பாசமா பார்த்துக்குறாரு…. அதனால் விவகாரத்து வேண்டும் என்று கேட்ட மனைவி… அதிர்ந்து போன ஜட்ஜ் என்ன சொன்னார் தெரியுமா?

கணவர் ரொம்ப பாசமா பார்த்துக்குறாரு…. அதனால் விவகாரத்து வேண்டும் என்று கேட்ட மனைவி… அதிர்ந்து போன ஜட்ஜ் என்ன சொன்னார் தெரியுமா?

கூகிள் செய்தியிலும் எங்கள் செய்தியை படிக்கலாம் Follow Now

காலம் மாறிக் கொண்டே இருக்கிறது. அமைதியாக இருக்கும் ஆன்களைவிட அடிதடியில் இருக்கும் ஆன்களை தான் மங்கைகளுக்கு ரொம்பப் பிடிக்கும். அவர்களைதான் காதலிப்பார்கள் என்றெல்லாம் தமிழ் சினிமாவில் பார்த்துப் பழகியிருக்கிறோம். ஆனால் இங்கே ஒரு மங்கை தன் கணவர் தன்னை அன்பாகப் பார்த்துக் கொள்வதாக கோபப்பட்டு விவாகரத்து கேட்டுள்ளார்.

இதுகுறித்து தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். இந்தச் சம்பவம் நம் இந்தியாவில் தான் நடந்துள்ளது. உத்திரப்பிரதேசத்தின் சாம்பல் மாவட்டத்தைச் சேர்ந்த மங்கை ஒருவர் தனக்குத் கல்யாணம் முடிந்து ஒன்றரை ஆண்டுகள் ஆன நிலையில் திடீரென டைவர்ஸ் கேட்டு கோர்ட்டில் மனு செய்தார்.

அந்த மனுவை வாசித்துப்பார்த்த நீதிபதிக்கு ஒருநிமிடம் வியர்த்துவிட்டது. காரணம், இந்த நீதிமன்றம் பல விசித்திரமான வழக்குகளைச் சந்தித்துள்ளது என்னும் பராசக்தி திரைப்பட வசனத்தைப் போல அதில் இருந்த வாசகங்கள் இருந்தது. ஆம், அந்த இளம்மங்கை தன் மனுவில், ‘என் கணவர் என் மீது அளவுக்கு அதிக அன்புவைத்திருக்கிறார். நாங்கள் சேர்ந்து வாழ்ந்த ஒன்றரை ஆண்டில் அவர் என்னிடம் சண்டை போட்டதே இல்லை. எனக்கு சமையலில் உதவியும் செய்கிறார். நான் தவறு செய்தாலும் பெருந்தன்மையோடு மன்னித்துவிடுகிறார்.

இதனால் எனக்கு லைப் செம போர். அவரோடு வாழ விரும்பவில்லை’ என நீண்டது மனு. கணவர் தரப்போ, ‘நான் என் கடமையை சரியாகச் செய்கிறேன். என் மனைவியோடு சேர்த்து வையுங்கள்’ என சொல்ல நீதிபதிக்கே தலைசுற்றிவிட்டது. இன்றைய சூழலில் குடித்துவிட்டு வந்து கணவர் அடிக்கிறார், சந்தேகப்படுகிறார் என்றெல்லாம் பல மங்கைகள் அழுதுகொண்டே நீதிமன்றம் வருகிறார்கள். ஆனால் இப்படியும் ஒரு வழக்கா? என யோசித்த நீதிமன்றம், கடைசியில் தம்பதியினர் பரஸ்பரம் மனம் விட்டு பேசும்மாறு சொல்லி வழக்கை வேறு தேதிக்கு ஒத்திவைத்தது.

இதுபோன்ற சிறப்பான , தரமான செய்திகளை டெலிக்ராம் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள் Join Now

கூகிள் செய்தியிலும் எங்கள் செய்தியை படிக்கலாம் Follow Now

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...

error: Content is protected !!