கதறி அழுத அம்மாவை சமாதானப்படுத்திய நடிகர் அஜித்

கதறி அழுத அம்மாவை சமாதானப்படுத்திய நடிகர் அஜித்யின் வீடியோ இணையத்தில் வெளியாகி இணையவாசிகளை கவர்ந்து தற்போது வைரலாக பரவி வருகிறது.
கடந்த டிசம்பர் மாதம் உலகச் சுற்றுப் பயணத்தின் முதல் சுற்றை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பயணம் செய்து முடித்துள்ளதாகத் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. முன்னதாக இந்த சுற்றுப் பயணம் 7 கண்டங்கள், 60 நாடுகள் என மொத்தம் 18 மாதங்கள் ஆகும் எனவும் இது அஜித்தின் நீண்ட நாள் கனவு எனவும் தகவல்கள் வெளியானது நினைவுகூறத்தக்கது.
இந்நிலையில், நடிகர் அஜித் குமாரின் தந்தை மணி என்கிற சுப்ரமணியன் காலமானார். அவருக்கு வயது 84. கடந்த 4 ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு இருந்த அவர் இன்று அதிகாலை உயிரிழந்தார். சென்னை பெசண்ட் நகர் மயானத்தில் இன்று காலை 10 மணிக்கு உடல் தகனம் செய்யப்பட உள்ளது.