கனவு திட்டத்தை தொடங்கிய சென்னை போலீஸ் கமிஷனர்

பொது மக்கள் சொன்ன குறை களை அவர் அமைதியாக கேட்டு, அதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு அதிகாரி களுக்கு உத்தரவு வழங்கினார். பொதுமக்கள் சொன்ன குறை களில் திருட்டு, ‘ஆன்-லைன்’ மோசடி, நில அபகரிப்பு, கொடுக்கல்-வாங்கல் பிரச் சினை, காசோலை மோசடி போன்றவை தான் அதிகமாக காணப்பட்டது. சிலர் இ-பாஸ் கேட்டனர். சிலர் ஊரடங்கில் தங்களுக்கு உள்ள தொல்லைகள் குறித்து கமிஷனரிடம் எடுத்து கூறினார்கள். இது நல்ல திட்டம் என்று கமிஷனருக்கு பொது மக்களில் சிலர் பாராட்டு தெரிவித்தனர்.
பொதுமக்கள் 6369100100 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் அடுத்து வரும் திங்கட் கிழமை அன்று பகல் 12 மணி முதல் 1 மணி வரை கமிஷனரோடு வீடியோ காலில் பேசலாம்.
மற்ற நேரங்களில் இந்த நம்பரில் பேச வேண்டாம் என்றும், அப்படி பேசினால் தொடர்பு கொள்ள முடியாது என்றும் போலீசார் தெரிவித்தனர்.