காஞ்சனா பாட்டுக்கு அப்படியே ஆடி மிரள வைத்த கல்லூரி மாணவர்கள்

காஞ்சனா பாட்டுக்கு அப்படியே ஆடி மிரள வைத்த கல்லூரி மாணவர்கள்

காஞ்சனா பாட்டுக்கு அப்படியே ஆடி மிரள வைத்த கல்லூரி மாணவர்களின் டான்ஸ் இணையத்தில் வெளியாகி தற்போது இணையவாசிகளை கவர்ந்து செம வைரலாகி வருகிறது.

கல்லூரி விழா என்றாலே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக தான் இருக்கும். அதிலும் மாணவர்கள் செய்யும் அட்டகாசங்கள் மிகச் சிறப்பாக இருக்கும். அந்த வகையில் மாணவர்கள் காஞ்சனா வேஷமிட்டு ஆடிய நடனம் இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான காஞ்சனா படத்தில் இடம்பெற்ற பாடல் விளையாட வர்றா காஞ்சனா. இந்த பாடல் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது மக்களிடத்தில். இந்த பாடலுக்கு தான் கல்லூரி விழாவில் மாணவிகளின் நடனம் தற்போது வைரல் ஆகியுள்ளது. மாணவர்கள் சிறப்பான ஆட்டத்தால் அங்கு குவிந்திருந்த மாணவ மாணவிகள் கை தட்டி ஆரவாரம் செய்து மாணவர்கள் நடனத்தை பாராட்டி புகழ்ந்துள்ளனர்.

அவர்களின் நடனத்தை வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். தற்போது அந்த வீடியோ தான் இணையவாசிகளின் கண்ணில் பட்டு செம வைரலாகியுள்ளது. அவர்களது நடனத்தை தத்ரூபமாக ஆடி உள்ளதாக இணையவாசிகள் பாராட்டி புகழ்ந்து பல கருத்துக்களை அந்த வீடியோவில் தெரிவித்து வருகின்றனர். நீங்களும் நடனத்தை பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.

இதையும் பாருங்க:  இந்த நிலைமை எந்த மகளுக்கும் வரக்கூடாது!! மனதை உருக்கும் காணொளி!

Related articles