காதலில் விழுந்ததால் கஷ்டப்பட்டேன் : நடிகை மீரா நந்தன்

காதலில் விழுந்ததால் கஷ்டப்பட்டேன் : நடிகை மீரா நந்தன்

Follow us on Google News Click Here

தமிழ் திரையுலகில் வால்மீகி, அய்யனார், சண்டமாருதம், சூரிய நகரம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை மீரா நந்தன். மலையாளம், தெலுங்கு படங்களிலும் இவர் நடித்து இருக்கிறார்.

அவர் கடைசியாக இரண்டு வருடங்களுக்கு முன்பு கோல்ட் காய் என்ற மலையாள திரைபடத்தில் நடித்து இருந்தார். அதன்பிறகு படங்களில் நடிக்கவில்லை. தற்போது துபாயில் வசித்து வருகிறார் .

கடந்த சில தினங்களாக அவர் அறைகுறை உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து வலைத்தளத்தில் புகைப்படங்கள் வெளியிட்டு வந்தார் . அதை பார்த்த ரசிகர்கள் பலர் விமர்சித்தனர். இதற்க்கு பதில் அளித்த மீரா நந்தன் எனது ஆடைகளை வைத்து என்னை மதிப்பிட யாருக்கும் உரிமை இல்லை. எந்த மாதிரி ஆடைகள் அணிவது என்பது எனது விருப்பம் என்று தெரிவித்தார்.

மேலும் தனது பிறந்தநாளை கொண்டாடிய போது , ‘இந்த இருபது வயதில் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன். அதில் நிறைய கற்றுக்கொண்டேன். சில முதல் அனுபவங்கள் இருந்தன. ஏற்றத்-தாழ்வுகளை சந்தித்தேன். நடிகையாக தொடர்ந்தேன். பிறகு ரேடியோ ஜாக்கி ஆனேன். காதலில் விழுந்தேன். அதன்பிறகு கஷ்டப்பட்டேன். என்னை நேசிக்க கற்றுக்-கொண்டேன். குடும்பம் முக்கியம் என்பதை உணர்ந்தேன்’ என்று கூறியுள்ளார்.

Follow us on Google News Click Here

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...

error: Content is protected !!