கார் மோதி கர்ப்பிணி பெண் பலி – தப்பி ஓடிய பெண்ணுக்கு போலீசார் வலைவீச்சு

கார் மோதி கர்ப்பிணி பெண்  பலி – தப்பி ஓடிய பெண்ணுக்கு போலீசார்  வலைவீச்சு

கொளத்தூரில் சாலையில் தாறுமாறாக ஓடிய கார் மோதியதில் கர்ப்பிணி பலியானார். அந்த காரில் வருமான வரித்துறை என எழுதி இருந்ததால் காரை ஓட்டி வந்த பெண் வருமான வரித்துறையில் அதிகாரியா என பல்வேறுகோணத்தில் காவல்துறை விசாரித்து வருகின்ற என தெரிகிறது


சென்னை கொளத்தூர் ராஜமங்கலம் ராமதாஸ் பகுதியை சேர்ந்தவர் அசாரரு தீன். இவர், ராஜமங்கலத்தில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி – கவுசிபி(வயது 26). தற்போது இவர், 5 மாத கர்ப்பிணியாக இருந்து உள்ளார்

.
நேற்று மதியம் கவுசிபி, கொளத்தூர் அருகே ‘ஸ்கேன்’ பரிசோதனை செய்துவிட்டு, அதன் முடிவை தனது கணவரிடம் சொல்வதற்காக ராஜமங்கலத்தில் உள்ள துணிக்கடைக்கு நடந்து வந்துகொண்டிருந்தார். சிறிதுதூரம் நடந்து வந்ததால் அவருக்கு மூச்சு வாங்கியது. இதன் காரணமாக ராஜமங்கலம் ராமதாஸ் காலனி பிரதான சாலை ஓரமாக அமர்ந்து இருந்தார்.
அப்போது அந்த வழியாக அதிவேகமாக சாலையில் ஓடிவந்த கார், கர்ப்பிணி கவுசிபி மீது பயங்கரமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.


விபத்து நடந்ததும், அந்த காரை ஓட்டிய பெண், காரை அங்கேயே விட்டு ஆட்டோவில் ஏறி தப்பிச்சென்றுவிட்டார். இது குறித்து தகவல் அறிந்ததும் திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் ஹரி மற்றும் காவலர் சம்பவ இடத்துக்கு வந்து பலியான கர்ப்பிணி கவுசிபி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளார்

.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கு காரணமான காரை பறிமுதல் செய்தனர். அந்த காரில் வருமான வரித்துறை என எழுதப்பட்டு இருந்தது. எனவே அந்த காரை ஓட்டிவந்த பெண், வருமான வரித்துறையில் அதிகாரியாக பணியாற்றி வருகிறாரா? எனவும், காரை தாறுமாறாக ஓட்டி வந்ததால் காரை ஓட்டி வந்த பெண், மது அறுத்திவிடு போதையில் ஓட்டி விபத்தை ஏற்படுத்தினாரா? என்ற பல கோணத்திலும் காவலர் விசாரித்து வருகின்றனர்.

இதையும் பாருங்க:  மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே புரியும் இந்த தருணம்


சாலையில் தாறுமாறாக ஓடிவந்த கார் மோதி கர்ப்பிணி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...