கிளிக்கு உணவு வுட்டிய காகம்… போன ஜென்மத்தில் அண்ணன் தங்கையாக இருந்திருக்குமோ…

கிளிக்கு உணவு வுட்டிய காகம்… போன ஜென்மத்தில் அண்ணன் தங்கையாக இருந்திருக்குமோ…

கிளிக்கு உணவு வுட்டிய காகத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி செம வைரலாகிவருகிறது. இணையவாசிகள் போன ஜென்மத்தில் அண்ணன் தங்கையாக இருந்திருக்குமோ என்று பேசி வருகின்றனர்.

உலகத்தில் பிறந்த அனைத்து உயிர்களும் ஓன்றை ஓன்று சார்ந்து வாழ்கிறது. உலகம் சமநிலையில் இயங்குவதற்கும் மற்ற உயிர்களிடத்தும் நாம் அன்பு, பரிவு காட்டுவது அவசியம். அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் புன்கணீர் பூசல் தரும். உலகப்பொது மறை திருக்குறளில் அறத்துபால் இல்லறவியலில் அன்புடைமை பற்றி திருவள்ளுவர் இந்த குறளில் அன்பினை தாழ்பாள் கொண்டு அடைக்கும் திறன் இந்த உலகத்தில் இல்லை என்றும் அன்பு கொண்டவர்கள் துன்பப்படும் போது நம்மையும் அறியாமல் கண்ணீர் வரும் என்றும் உரைக்கிறார்.

சக உயிர்கள் மேல் நாம் கொள்ளும் அன்பானது நம் செயல்களில் வெளிப்படும். ஒருவரின் துன்பத்தை போக்குவது என்பது முடியாவிட்டாலும் அவர் துன்பத்தை அனுபவிக்கும் போது தானாகவே கண்களில் நீர் துளிகள் வெளிப்படும். மேலும் நம்மால் முடியும் சிறு உதவியாவது செய்வோம். மனிதர்கள் மட்டும் அல்ல விலங்குகளும், பறவைகளும் மற்ற இனங்களின் மேல் அன்புடன் பழகும்.

பொதுவாக மனிதர்கள் காக்கைக்கு சோறு வைத்து பார்த்திருப்போம்…..ஆனால் இங்கே காக்கை….. கிளிக்கு உணவு கொடுத்து பசியாற்றிருக்கிறது. இந்த காணொலியில் காக்கையும் கிளியும் சற்று அருகே அமர்ந்திருக்கிறது காகமானது வாயில் வைத்திருந்த உணவினை கிளிக்கு அருகில் சென்று வைத்து கொண்டு நகர்ந்து விடுகிறது. கிளியும் இதை கவனித்து விட்டு உடனடியாக இரையை எடுத்து கொண்டு பறந்து விடுகிறது. இந்த சம்பவமானது பசியோடிருந்த கிளிக்கு காகம் உணவினை கொடுத்து பசியாற்றியதாக தெரிகிறது. அந்த காணொளியை இங்கே காணலாம்….

இதையும் பாருங்க:  மணமகளிடம் தாலியை கொடுத்து கட்ட சொன்ன புரோகிதர்

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...




‘பத்மாவத்’ கெட்டப்பில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் ஷிவானி! ரஜினிகாந்த்தை சந்தித்த வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் சேலையை சரியவிட்டு கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த அதுல்யா ரவி வாவ்.. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. பட்டு புடவை அழகில் ஜொலிக்கும் அதிதி! உலகில் புவி ஈர்ப்பு விசை செயல்படாத 10 இடங்கள்