குப்பை பொறுக்கியவரை கோடீஸ்வரராக்கிய அதிசய குப்பை பற்றி தெரியுமா?

குப்பை பொறுக்கியவரை கோடீஸ்வரராக்கிய அதிசய குப்பை பற்றி தெரியுமா?

கூகிள் செய்தியிலும் எங்கள் செய்தியை படிக்கலாம் Follow Now

குப்பை பொறுக்கியவரை கோடீஸ்வரராக்கிய குப்பை பற்றி தெரியுமா?

தாய்லாந்தை சேர்ந்தவர் சோம்சாக் பூன்ரித், இவருக்கு 45 வயதாகிறது. தொடக்கத்தில் இவர் மீனவராக இருந்தார். ஆனால் புயலினால் இவரது படகு கடும் சேதம் அடைந்துள்ளது.இதனால் வாழ்வாதாரம் இழந்தவர், கடற்கரையில் குப்பைகளை சேகரிக்கத் துவங்கினார். அப்படி அவர் ஞாயிற்றுக்கிழமை சேகரித்தபோது கடற்கரையில் மஞ்சள் நிறத்தில் மெழுகுபோல் ஏதோ கிடைத்தது.அதைப் பார்த்ததும் அதை சந்தோசமாக எடுத்துக்கொண்டவர் அதை திமிங்கலத்தின் வாந்தி என கொண்டாடத் ஆரம்பித்தார்.

இது என்ன புதிதாக இருக்கிறது எனறு பார்க்கிறீர்களா? நடுக்கடலில் இருக்கும் திமிங்கலங்கள் சிலநேரம் அரிதான மீன்களை சாப்பிடுமாம். அவை செமிக்காமல் திமிங்கலத்தின் குடலிலேயே தங்கிவிடும். கொஞ்ச நாளில் அது ஒரு பெரிய பந்து மாதிரி மாரிவிடும். இதை வெகுநாள்களுக்கு பின்னர் திமிங்கலம் வாந்தியாக வெளியில் தள்ளுமாம். இந்த வாந்தி மெழுகு பந்து மாதிரி இருக்கும். இதை விஞ்ஞானிகள் ambergris என்று சொல்லுகின்றார்கள்.

இது வாசனை திரவியங்கள் செய்ய பயன்படும். இதன் விலையும் இதனால் அதிகமாக இருக்கும். இவர் மீனவர் என்பதால் இதுபற்றி அவருக்கு தெரிந்து இருந்ததாம். இதன் மதிப்பு 80 ஆயிரம் பவுண்ட் ஆம்…அதாவது இந்தியப் பணத்தில் 1,85,29,783 ரூபாயாம்.

கடந்த 2016ல் 1.5 கிலோ எடைகொண்ட திமிங்கல வாந்தி 50 ஆயிரம் பவுண்ட்க்கு விலைபோனது குறிப்பிடத்தக்கது. என்ன பேசாமா தாய்லாந்து கடலில் குப்பை பொறுக்க போயிடலாமான்னு யோசிக்குறீங்களா? அப்படி நாம் போனாலும் அதிஷ்டம் இருந்தால் மட்டுமே கிடைக்கும் என்று பலரும் சொல்லி வருகின்றனர்.

இதுபோன்ற சிறப்பான , தரமான செய்திகளை டெலிக்ராம் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள் Join Now

கூகிள் செய்தியிலும் எங்கள் செய்தியை படிக்கலாம் Follow Now

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...

error: Content is protected !!