குரங்கு குட்டிக்கு நண்பனான நாய்க்குட்டி

குரங்கு குட்டிக்கு நண்பனான நாய்க்குட்டி

Follow us on Google News Click Here

குரங்கு குட்டிக்கு நண்பனான நாய்க்குட்டியின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.

பொதுவாக குரங்கு, நாய் போன்ற விலங்கு கள் அதி புத்திசாலியாக இருப்பதும், ஆபத்து காலத்தில் அவர்களு க்குள் காப்பாற்றிக் கொள்வதையும் தமிழ் திரையுலகில் ராம நாராயணனின் படங்களில் தான் பார்த்திருப்போம். ஆனால் இப்போது உண்மையிலேயே அப்படி ஒரு சம்பவம் நடந்துள் ளது.

பொதுவாக செல்லப்பிராணி கள் வளர்ப்பில் பலரும் நாய் வளர்ப்பு க்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். வீட்டில் வளர்க்கப்படும் நாய்களும் பிள்ளைபோல் வளர்ந்துவிடுவதுதான் இதற்குக் காரணம். நாய் கள் மற்ற விலங்குகளைவிட கூடுதலாக நேசம் காட்டுவதோடு, வீட்டு க்குத் தேவையான உதவிகளையும் செய்கிறது. இங்கேயும் அப்படித்தான் ஒரு வீட்டில் நாய் ஒன்று குட்டி போட்டிருந்தது. அதே ஏரியாவில் கடந்த சில வாரங்களாகச் சுற்றிவந்த குரங்கும் குட்டி போட்டிருந்தது. இந்நிலையில் யாருமே எதிர்பார்க்காத வகையில் அந்த குட்டி நாயும், குரங்கும் நல்ல நண்பர் கள் ஆகிவிட்டனர்.

குட்டி குரங்கும், அந்த நாயும் சேர்ந்தே தூங்குகின்றன. சேர்ந்தே விளையாடுகின்றன. இதையெல்லாம் விட உச்சமாக ஒன்றின் மேல் மற்றொன்று கை போட்டுத்தான் உறங்குகின்றன. இந்த காட்சியை யாரோ ஒருவர் தன் செல்போனில் பதிவு செய்துபோட அது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ நீங்களே அந்தக் காட்சியைப் பாருங்களேன்.

Follow us on Google News Click Here

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...