குரங்கு குட்டிக்கு நன்பனாக மாறிய நாயக்குட்டி

குரங்கு குட்டிக்கு நன்பனாக மாறிய நாயக்குட்டி

குரங்கு குட்டிக்கு நன்பனாக மாறிய நாயக்குட்டியின் வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி செம வைரலாக பரவி வருகிறது.

பொதுவாக குரங்கு, நாய் போன்ற உயிரினங்கள் அதி புத்திசாலியாக இருப்பதும், ஆபத்து காலத்தில் அவர்களுக்குள் காப்பாற்றிக் கொள்வதையும் தமிழ் திரையுலகில் ராம நாராயணனின் படங்களில் தான் பார்த்திருப்போம். ஆனால் இப்போது உண்மையிலேயே அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. பொதுவாக செல்லப்பிராணிகள் வளர்ப்பில் பலரும் நாய் வளர்ப்புக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். வீட்டில் வளர்க்கப்படும் நாய்களும் பிள்ளைபோல் வளர்ந்துவிடுவதுதான் இதற்குக் காரணம்.

நாய்கள் மற்ற விலங்குகளைவிட கூடுதலாக நேசம் காட்டுவதோடு, வீட்டுக்குத் தேவையான உதவிகளையும் செய்கிறது. இங்கேயும் அப்படித்தான் ஒரு வீட்டில் நாய் ஒன்று குட்டி போட்டிருந்தது. அதே ஏரியாவில் கடந்த சில வாரங்களாகச் சுற்றிவந்த குரங்கும் குட்டி போட்டிருந்தது. இந்நிலையில் யாருமே எதிர்பார்க்காத வகையில் அந்த குட்டி நாயும், குரங்கும் நல்ல நண்பர்கள் ஆகிவிட்டனர். குட்டி குரங்கும், அந்த நாயும் சேர்ந்தே தூங்குகின்றன. சேர்ந்தே விளையாடுகின்றன.

இதையெல்லாம் விட உச்சமாக ஒன்றின் மேல் மற்றொன்று கை போட்டுத்தான் உறங்குகின்றன. இந்த காட்சியை யாரோ ஒருவர் தன் செல்போனில் பதிவு செய்துபோட அது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ நீங்களே அந்தக் காட்சியைப் பாருங்களேன்.

இதையும் பாருங்க:  விளையாட்டுக்கு கூட அப்பாவை அடிக்காத மகளின் பாசம்

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...
‘பத்மாவத்’ கெட்டப்பில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் ஷிவானி! ரஜினிகாந்த்தை சந்தித்த வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் சேலையை சரியவிட்டு கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த அதுல்யா ரவி வாவ்.. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. பட்டு புடவை அழகில் ஜொலிக்கும் அதிதி! உலகில் புவி ஈர்ப்பு விசை செயல்படாத 10 இடங்கள்