குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பினால் 15000 ரூபாய் ; ஆந்திர அரசின் புதிய திட்டம்

குழந்தை களை பள்ளி க்கு அனுப்பும் குடும்பத் திற்கு ஆண்டுக்கு 15000 ரூபாய் வழங்கும் புதிய திட்டத்தை ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தொடங்கிவைத்துள்ளார்.
“தாய்மடி” திட்டம் என பொருள்படும் வகையில் பெயரிடப்ப ட்டுள்ள இந்த திட்டத்திற்கு 6,456 கோடி ரூபாயை ஆந்திர அரசு ஒதுக்கியுள்ளது. இந்த திட்டம் மூலம் சுமார் 82 லட்சம் மாணவ, மாணவிகள் பயன்பெறுவார்கள் என ஆந்திர அரசு தெரிவித் துள்ளது.
பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் எவ்வித இடை யூறும் இன்றி கல்விகற்க வசதியாக ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் அனைத்து மாணவ, மாணவி களுக்கும் தாய் மடி திட்டத்தில் கல்வி உதவித் தொகை வழங்கப் படவுள்ளது.
அந்த பணம் பிள்ளைக ளுடைய தாயின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என முதல்வர் ஜெகன் மோகன் அறிவித்துள்ளார். ஆந்திர முதல்வ ராக பொறுப்பேற்றது முதலே பல அதிரடி அறிவிப்புகளை அறிவித்துவரும் ஜெகன்மோகன் ரெட்டி யின் இந்த புதிய அறிவிப்பு, மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வறுமை காரண மாக பள்ளிக்கு செல்லாமல் இருக்கும் குழந்தை களுக்கு இந்த புதிய திட்டம் மிகவும் பயனுள்ள தாக இருக்கும் எனவும் இதனால், அவர்களது பெற்றோரும் பயனடைவர் என கூறப் படுகிறது.