கொடுத்த வாக்கில் இருந்து என்றுமே தவற மாட்டேன் : ரஜினி பேட்டி

கொடுத்த வாக்கில் இருந்து என்றுமே தவற மாட்டேன் : ரஜினி பேட்டி

Follow us on Google News Click Here

நடிகர் ரஜினி காந்த் அரசியல் குதிப்பது  பற்றிய அவரது  அறிவிப்பினை டுவிட்டர் வழியே இன்று உறுதிப் படுத்தியுள்ளார்.   அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் குறிப்பில் , ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதே போன்று, #மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம் #இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல   என்ற ஹேஷ்டாக்குகளும் இடம் பெற்றுள்ளன.  

இதுபற்றி ரஜினி  டுவிட்டரில் வெளியிடப்பட்ட மற்றொரு செய்தியில், வர போகிற சட்டசபை தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மத சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம்.  

அற்புதம்… அதிசயம்… நிகழும்!!! என்றும் தெரிவித்து உள்ளார்.   இந்நிலையில்,  சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-   நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் சுற்றுப் பயணம் செய்வது ஆபத்து என மருத்து-வர்கள் அறிவுறுத்தினர்.  

என் உயிரே போனாலும் மக்களே முக்கியம் என களம் இறங்கி உள்ளேன். அரசியல் மாற்றம் தேவை… கட்டாயம் நிகழும்.   உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதாக இருந்தோம். கொரொனாவால் என்னால் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல முடியவில்லை.   2017 டிசம்பர் 31-ல் அரசியலு-க்கு வருவது உறுதி என கூறி இருந்தேன். தமிழக மக்களுக்காக என் உயிரே போனாலும் சந்தோஷம் தான்.

தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றவேண்டிய நாள் வந்து விட்டது.   கொடுத்த வாக்கில் இருந்து என்றுமே தவற மாட்டேன். தேர்தலில் நான் வெற்றி பெற்றால் அது மக்களின் வெற்றி. என் உயிரே போனாலும் மக்களே முக்கியம் என களம் இறங்கி உள்ளேன்.   இவ்வாறு அவர் கூறினார்.

Follow us on Google News Click Here

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...